Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு ரசிகர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி.. பேட்டிங்கிற்கு களமிறங்கிய போது நிகழ்ந்த அற்புதம்

மொஹாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியல் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இது விராட் கோலியின் 100வது டெஸ்ட் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா, மாயங் அகர்வால் ஆகியோர் களமிறங்கி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரன்குவிப்பு

ரன்குவிப்பு

இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச, டெஸ்ட் போட்டியில் ஒருநாள் ஆட்டம் இருவரும் விளையாடினர். குறிப்பாக ரோகித் சர்மா 6 பவுண்டரிகளை விளாசி 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாட் பாலில் ஆட்டமிழந்தார்.

மாயங் அவுட்

மாயங் அவுட்

இதன் பின்னர் 3வது வீரராக விஹாரி களமிறங்கி ரன்களை சேர்த்தார். புஜாரா இடத்தில் முதல் முறையாக விளையாடும் விஹாரி, அவர் இல்லாத குறையை தீர்த்தார். விஹாரி அடித்த சில ஷாட்கள், புஜாராவுக்கு சிக்கலை தான் அதிகப்படுத்தின. மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய மாயங் அகர்வால் 33 ரன்களில் எல்.பி. டபிள்யூ ஆனார்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

இதனையடுத்து, 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய விராட் கோலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். அப்போது ரசிகர்களின் உற்சாக குரல் விண்ணை பிளந்தது.

இலங்கை பிளான்

இலங்கை பிளான்

விராட் கோலி, ரன்களை அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் மான் போல் துள்ளி குதித்து களத்திற்கு வந்தார். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. கோலிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள திணறுகிறார். இதனால் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து கோலியை கட்டுப்படுத்த இலங்கை கேப்டன் கருணரத்னே முடிவு எடுத்துள்ளார்.

Story first published: Wednesday, April 6, 2022, 12:02 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+