Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம விராட் கோலியா இது??.. ஓவர் குஷியால் செய்த தவறு.. கடுப்பான அஸ்வின்.. ரோகித் சர்மா அதிரடி முடிவு

நாக்பூர்:ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ச்சியாக ஒரே தவறை செய்து வருவதால் அஸ்வினும், ரோகித் சர்மாவும் கடுப்பாகியுள்ளனர்.

நாக்பூரில் நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த போதும் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

பிட்ச் பேட்டிங்கிற்கு கடினமாக உள்ளது என விவாதங்கள் எழுந்த சூழலில், அப்படி எதுவுமே கிடையாது என இந்திய பேட்டர்கள் நிரூபித்தனர். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 212 பந்துகளில் 120 ரன்களை அடித்து அசத்தினார்.

3வது நாள் போட்டி

3வது நாள் போட்டி

இதே போல லோயர் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா (70) , அக்‌ஷர் பட்டேல் (84) ரன்களை அடிக்க முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 400 ரன்களை குவித்தது. இதனால் 223 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்த போட்டியில் டெயில் எண்டர்களெல்லாம் சிறப்பாக ஆடிய போதும் விராட் கோலி வெறும் 12 ரன்களுக்கு அவுட்டானது ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் விமர்சனத்தை பெற்றுள்ளார்.

கடுப்பான அஸ்வின்

கடுப்பான அஸ்வின்

ஃபீல்டிங்கில் கிங் என்று பெயர் பெற்ற விராட் கோலி பெரும்பாலும் ஸ்லிப்களில் தான் ஃபீல்டிங் செய்ய நிற்பார். அதே போன்று இந்த போட்டியிலும் செய்யும் போது தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அஸ்வின் வீசிய ஓவரில் டேவிட் வார்னர் ஸ்ட்ரோக் வைக்க நினைத்து எட்ஜானார். பந்து மிகவும் அழகாக விராட் கோலியின் கைகளுக்கே சென்றது. ஆனால் கேட்ச் பிடிப்பதற்கு முன்னதாகவே கோலி குஷியாகிவிட்டார்.

அதிக மகிழ்ச்சி

அதிக மகிழ்ச்சி

முன்கூட்டியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் கையில் இருந்த பந்து நழுவி கீழே விழுந்தது. இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதே போல கேப்டன் ரோகித் சர்மாவும் கடுப்பாகி, கோலியை உடனடியாக ஸ்லிப் திசையில் இருந்து நீக்கி வேறு இடத்தில் ஃபீல்டிங் நிற்கவைத்தார். ஒரு கேட்ச் விட்டதற்காகவா இப்படி என்று கேட்கலாம். ஆனால் இதே போட்டியில் அவர் தவறவிடும் 3வது கேட்ச் ஆகும்.

3வது வாய்ப்பு

3வது வாய்ப்பு

முதல் இன்னிங்ஸின் போது டேஞ்சர் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்குவதற்காக கிடைத்த ஸ்லிப் கேட்ச்-ஐ அசால்ட்டாக தவறவிட்டார். பின்னர் ஹேண்ட்ஸ் கோம்ப்-யிடம் வந்த கேட்ச்-ஐயும் தவறான டைமிங் காரணமாக பிடிக்காமல் தவறவிட்டார். இதனுடைய வெளிப்பாடு தான் இன்று காட்டப்பட்டுள்ளது. இதனால் நம்ம கோலியா இது என ரசிகர்களே ஆச்சரியமடைந்துள்ளனர்.

Story first published: Saturday, February 11, 2023, 14:58 [IST]
Other articles published on Feb 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+