Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா! இப்படி ஒரு சூப்பர் மேன் கேட்ச்சா.. மிரட்டிய இந்திய வீராங்கனை.. வாயைப்பிளந்த ரசிகர்கள்!

நார்த்தாம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பிடித்த ஸ்பைடர் மேன் கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

India வீரங்கனை Harleen Deol பிடித்த stunning catch Video goes Viral | Oneindia Tamil

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

இதன் முதல் டி20 போட்டி நார்தாம்டனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழந்து, 177 ரன்களை எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 54/3 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறையின் படி

18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

அசத்தல் கேட்ச்

அசத்தல் கேட்ச்

போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், அனைவரின் கவனமும் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோலின் பக்கம் திரும்பியுள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, 18வது ஓவரின் 5வது பந்தை இந்திய பந்துவீச்சாளர் ஷிகா பாண்டே வீச எமி ஜோன்ஸ் பந்தை பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார். பவுண்டரிக்கு அருகே பீல்டிங் செய்த ஹர்லீன் தியோல் தலைக்கு மேல் சென்ற பந்தை பவுண்டரி கோட்டை தாண்டி வெளியே சென்று எகிறி தட்டிவிட்டி பின் மீண்டும் மைதானத்திற்குள் பறந்து அசத்தலாக பந்தை கேட்ச் பிடித்தார்.

சச்சின் பாராட்டு

சச்சின் பாராட்டு

ஹர்லீனின் இந்த கேட்ச்சை பார்த்த பலரும் மிரண்டு போயுள்ளனர். இதுகுறித்து வீடியோவை ட்வீட் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தாண்டின் சிறந்த கேட்ச்சாக இதனை தான் நான் கூறுவேன். அசத்திவிட்டீர்கள் ஹர்லீன் என பாராட்டியுள்ளார். இதே போல முன்னாள் வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மண் உள்ளிட்டோரும் பாராட்டியுள்ளனர்.

அடுத்த டி20

அடுத்த டி20

பவுண்டரிக்கு செல்ல வேண்டிய பந்தை தாவிப்பிடித்து எதுவும் சாத்தியம் என்று நிரூபித்த இந்த கேட்ச் வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 கிரிக்கெட் போட்டி வரும் நாளை ஹோவ் நகரத்தில் நடைபெறவுள்ளது. தொடரில் வெற்றி பெற இங்கிலாந்தும், மீண்டு வர இந்திய அணியும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, July 10, 2021, 20:23 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+