Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்சா போக்லேவின் மட்டமான செயல்.. பதறிபோன ரசிகர்கள்.. மன்னிப்பு கேட்டு முற்றுபுள்ளி

மும்பை: பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டார்.

Recommended Video

ஹர்சா போக்லேவின் மட்டமான செயல்.. பதறிபோன ரசிகர்கள்.. மன்னிப்பு கேட்டு முற்றுபுள்ளி

ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பணிகளில் ஸ்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சுமார் 5000 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்கள் ஸ்டார் நிறுவனத்திடம் ஒப்பந்தமாகியுள்ளது.

ஹர்சா போக்லே வீடியோ

ஹர்சா போக்லே வீடியோ

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முன்னோட்டம் குறித்து தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஹர்சா போக்லே இன்ஸ்டாகிராம் மூலம் பேட்டி அளித்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு ஹர்சா போக்லே பதில் அளித்து வந்தார். அப்போது திடீரென்று யார் நீங்கள்,உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் இங்கு வந்தீர்கள் என ஹர்சா போக்லே நேரலையில் கோபமாக கூறினார்.

வைரலான காட்சி

வைரலான காட்சி

பின்னர் கேமிரா விழுந்தது போல் லைவ் பாதியிலேயே தடைப்பட்டு நின்றது. இதனையடுத்து ஹர்சா போக்லேவிற்கு என்ன ஆச்சு, அவர் நிலை என்ன? யாரோ அவரை தாக்கிவிட்டார்களா என்று ரசிகர்கள் பதறி போய்விட்டனர். இதனையடுத்து ஹர்சா போக்லேவின் அந்த நேரலை வைரலானது.

விளக்கம்

விளக்கம்

இறுதியில், அது ஐபிஎல் தொடருக்காக செய்யப்பட்ட விளம்பரம் என்று தெரியவந்தது. இதனையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் ஹர்சா போக்லேவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே தமது செயலுக்கு ஹர்சா போக்லே மன்னிப்பு கோரினார். தனது செயல், இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.

மன்னிப்பு

மன்னிப்பு

நான் நினைத்ததை விட அந்த காட்சிகள் வைரலாகிவிட்டது. வேறு நோக்கத்திற்காக செய்யப்பட்ட வீடியோ இது. ஆனால் இத்தனை பேர் பதறி போய் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. எனக்காக கவலைப்பட்டவர்களுக்கும், உங்கள் பாசத்துக்கும் நன்றி. எனது செயலுக்கு வருந்துகிறேன். இதிலிருந்து பாடம் கற்று கொண்டேன். இனி இப்படி ஒரு தவறு நடக்காது.

Story first published: Friday, March 25, 2022, 12:10 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+