உளவியல் தாக்குதல் நடத்திய அஸ்வின்.. சைகை காட்டி சிக்னல் .. கடுப்பான மார்னஸ் லாபஸ்சேன்
நாக்பூர் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. இதில் முக்கியமானது அஸ்வினுக்கும் சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள மாrனஸ் லாபஸ்சேனுக்கும் நடந்த ஒரு சிறிய சம்பவம் தான்.
இது பேட்டிங்கிற்கும் பந்துவீச்சுக்கும் இடையிலான போட்டி என்பதை தாண்டி உளவியல் ரீதியாக யார் யாரை ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற போட்டியாக மாறிவிட்டது.
தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆடுகளத்தில் இந்தியா மோசடி செய்துவிட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் குற்றச்சாட்டை வைத்து இந்தியாவின் கவனத்தை சிதறடித்தது.

ஆட்டமிழப்பு
மேலும் அஸ்வின் போன்ற ஒரு பந்துவீச்சாளரை அழைத்து நாங்கள் தயாராகி வருகிறோம் என்று அஸ்வினுக்கு எச்சரிக்கை கொடுப்பது போல் செய்தியை வேண்டும் என்றே பரப்பினார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியா அணியின் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் ஒரு ரன்களில் வேகப்பந்து வீச்சில் பெவிலியன் திருப்பினர்.

உளவியல் தாக்குதல்
இதனை அடுத்து மார்னஸ் லாபஸ்சேன் , ஸ்மித் ஜோடி பேட்டிங் செய்ய வந்தது. அப்போது ஆட்டத்தின் 23வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்து லாபஸ்சேன் தடுக்க முற்பட்டபோது பந்து நன்றாக எம்பி அவரது இடதுபுற தொடையில் பட்டது. அப்போது அஸ்வின் உளவியல் ரீதியாக மார்னஸ் லாபஸ்சேனுக்கு தாக்குதல் நடத்தும் வகையில் ஒரு சைகையை காட்டினார்.

சைகை காட்டிய அஸ்வின்
அதாவது விக்கெட் கீப்பரிடம் ரெடியாக இரு என்பது போல் கையை வட்டமிட்டு காட்டினார். இதனை பார்த்ததும் மார்னஸ் லாபஸ்சேன் டென்ஷன் ஆகிவிட்டார். நமக்கு ஏதோ வலையை விரிக்கிறார்கள் அதை தான் அஸ்வின் இப்படி காட்டுகிறார் என்று மனரீதியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் முயற்சியையே அஸ்வின் செய்தார்.

கடுப்பான மார்னஸ்
இதனால் லாபஸ்சேனும், பதிலுக்கு அஸ்வினை ஏதோ வார்த்தைகளை பயன்படுத்தி பதிலடி கொடுத்தார். லாபஸ்சேனின் 49 ரன்கள் அடித்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சு கடைசியாக ஆட்டம் இழந்தார். அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே விராட் கோலி ஸ்லிப்பில் ஒரு கேட்சை கோட்டை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications