Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ-இப்படியெல்லாமா பவுலிங் போடுவாங்க? காமெடியாக இருந்த பவுலிங்.. கடைசியில் பேட்ஸ்மேனுக்கு வைத்த ஆப்பு

குவைத் : நாம் காமெடியாக நினைக்கும் சில விஷயம் நமக்கு சீரியஸான ஆப்பை வைத்து விடும். அப்படி ஒரு நிகழ்வு தான் இன்று கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்திருக்கிறது. சிலர் பந்துவீச்சை பார்க்கும்போது இவர் என்ன செய்யப் போகிறார் என்று நினைப்போம். ஆனால் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்து விடுவார்.

இதேபோன்றுதான் சில பேட்ஸ்மேன் உடனே அவுட் ஆகி விடுவார் என்று நினைப்போம். ஆனால் கடைசியில் நமது அணிக்கே ஆப்பு வைத்து விடுவார். இந்த நிலையில் குவைத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஒரு வீரர் வீசிய பந்து செம காமெடியாக இருந்த நிலையில் அது அந்த பேட்ஸ்மேனுக்கு ஆப்பு வைத்தது.

Watch the video how ball turned and strucks stump in kuwait t20 match

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. குவைத்தில் கேசிசி 20 சேலஞ்சர்ஸ் என்ற கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவைத் நேசன்ஸ் அணியும் எஸ் பி எஸ் சி சி அணியினரும் பலப்பரிட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற எஸ் பி எஸ் சி சி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Watch the video how ball turned and strucks stump in kuwait t20 match

அப்போது குவைத் அணி பவுலர் வக்கார், வீசிய பந்து ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதில் பந்து வேறு எங்கேயோ குத்தி wide ஆகப்போகிறது என பேட்ஸ்மேன் நினைத்து அதை அடிக்காமல் விட அந்த பந்து நேரடியாக இன்டிகேட்டர் போடாமல் திரும்பி ஸ்டெம்பை வந்து தாக்கியது.

இதனை பார்த்ததும் பேட்ஸ்மேன் அப்படியே கதி கலங்கி போய் நின்றார். இந்த விக்கெட்டை பவுலர்கள் அனைவரும் கொண்டாடி வந்தனர். ஆப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிட் சென்ற பந்து எப்படி திரும்பி ஸ்டெம்பை தாக்கியது என்று அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் இந்த வீடியோவை லைக் செய்து மற்றவர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள். இதனை சிலர் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து என்று பாராட்டி வருகிறார்கள். மேலும் சிலர் இந்த தங்கத்தை அப்படியே தூக்கி ஐபிஎல் தொடருக்கு கொண்டு வாங்கடா என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி இப்படித்தான் நடக்கப் போகிறது என்று முன் முடிவு எடுக்காமல் கடைசிவரை கண்காணித்து அதற்கான பிளானை செய்ய வேண்டும் என்று சிலர் இந்த வீடியோவை வாழ்க்கையோடு ஒப்பிட்டு கூறி வருகிறார்கள்.

Story first published: Wednesday, February 14, 2024, 15:15 [IST]
Other articles published on Feb 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+