Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். ரசிகர்களை துரத்தி அடித்த ஆப்கான் ரசிகர்கள்..இருக்கைகள் பறந்தன.. சோயிப் அக்தர் கண்டனம்.. வீடியோ

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மோதிய ஆட்டம் யாராலும் மறக்க முடியாத போட்டியாக மாறிவிட்டது.

Recommended Video

Pakistan Fans-ஐ அடித்த Afghan Fans! Asia Cup தோல்வியின் எதிரொளி

ஒரு ஆக்சன் திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு பரபரப்பான காட்சிகளும், சண்டைகளும், மோதல்களும் நிகழ்ந்தன.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பல விரும்பத்தகாத செயல்களும் நடந்தன. இதில் யார் மீது தவறு என்பதை விட, பொறுப்புணர்வுடன் யாரும் நடந்து கொள்ளவில்லை என்பது தான் புகார்.

ஜென்டில்மேன் கேம்

ஜென்டில்மேன் கேம்

கிரிக்கெட் எப்போதும் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால் காலப் போக்கில் கால்பந்து போட்டியில் நடைபெறும் மோதல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், சண்டைகள் கிரிக்கெட் போட்டிகளும் அரங்கேறி வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்குள் அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும், பூலோக ரீதியாகவும் பல பிரச்சினைகள் இருக்கின்றன.

ஆரம்ப புள்ளி

ஆரம்ப புள்ளி

கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களை இந்திய ரசிகர்கள் வெறுப்பேற்றுவதும், இந்திய ரசிகர்களை பாகிஸ்தான் ரசிகர்கள் கேலி செய்வதும் என்ற ரீதியிலேயே இருக்கும் தவிர, இரு நாட்டு ரசிகர்களும் இதுவரை ஒரு முறை கூட மைதானத்தில் மோதி கொண்டது இல்லை. ஆனால் நேற்று நடந்த சம்பவம் கொஞ்சம் கையை மீறி தான் செல்ல வேண்டும். இதற்கு அனைத்தும் தொடக்க புள்ளி ஆசிஃப் அலி விக்கெட்டு தான். ஆசிஃப் அலி சிக்சர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தததும், ஆப்கான் பந்துவீச்சாளர் ஃபரித் கொண்டாடினார்.

மைதானத்தில் மோதல்

மைதானத்தில் மோதல்

இதனால் கடுப்பான ஆசிஃப் அலி, தன்னுடைய பேட்டை எடுத்து, ஃபரித்தை அடிக்க முயன்றார். இது ஆப்கான் ரசிகர்களை கோபம் அடைய செய்தது. நேற்று போட்டியில் பாகிஸ்தான் வென்றதும், அந்நாட்டு வீரர்கள் எதோ பெரிய அணியை வீழ்த்தியதை போல் கொண்டாடினர். இதனால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், கேலரியில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களை துரத்தி துரத்தி அடித்தனர். இருக்கைகளும் பறந்தன.

சோயிப் அக்தர் கண்டனம்

இதனால் மைதானத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இதை முதல் முறை செய்யவில்லை. அவர்கள் எப்போதும் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள். கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும். ஆப்கானிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுகொள்ளுங்கள். அப்போது தான் விளையாட்டில் முன்னேற முடியும் என்று தெரிவித்துள்ளார். எனினும் சோயிப் அக்தரின் குற்றச்சாட்டு ஒரு தலைப்பட்சமானது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Thursday, September 8, 2022, 13:22 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+