அஸ்வினை கிண்டலடித்த இங்கிலாந்து வீரர்..!! நண்பர்களான எதிரிகள்..!! தீயாக பரவும் வீடியோ இதோ
அகமதாபாத்: ஐபிஎல் மெகா ஏலத்தில் எதிரிகள் நண்பர்கள் ஆவதும், நண்பர்கள் எதிரிகளாவதும் சகஜம் தான்.
ஏன் மகாபாரதம் போல் உறவினர்கள் எதிரணியில் இருப்பார்கள், அவர்களை எதிர்த்து எல்லாம் விளையாடி வேண்டிய சூழல் வரும்.
தற்போது இந்த ஐபிஎல் சீசன் மூலம், இரு சர்வதேச நட்சத்திர வீரர்கள், இருதுருவங்களாக இருந்தவர்கள் நண்பராக உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதின. அப்போது பஞ்சாப் அணி சார்பாக பந்துவீசிய அஸ்வின், பந்தை விசாமல், ஜாஸ் பட்லரை ரன் அவுட் செய்தார். இதற்கு பெயர் மான்கடேட் என்று அர்த்தம். அஸ்வினின் இந்த செயல் பெரும் புயலை கிளப்பியது.
இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் விதிகள் படியே நான் விளையாடினேன் என்று அஸ்வின் கூறினார். இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரும் எதிரும், புதிருமாக தான் இருந்தனர். ஆனால் இன்று பட்லர் இடம்பெற்றுள்ள ராஜஸ்தான் அணியிலேயே, அஸ்வினும் தேர்வாகியுள்ளார்.
இதனை நினைவு கூரும் விதமாக ஜாஸ் பட்லர் தற்போது வீடியோ, ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஸ்வின் உங்களை ராஜஸ்தான் அணிக்கு வருகிறேன். கவலைப்படாதிர்கள் இம்முறை எல்லை கோட்டுக்கு உள்ளே தான் நிற்பேன். உங்களுடன் டிரஸிங் அறையை பகிர்ந்து கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என்று பட்லர் வீடியோவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications