Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிய ரமீஸ் ராஜா.. இந்திய பத்திரிகையாளரிடம் அத்துமீறல்.. செல்போனை பிடுங்கினார்.. வீடியோ

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அடைந்த தோல்விக்கு ரமிஸ் ராஜா, இந்திய பத்திரிகையாளரிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

Indian Journalist vs Ramiz Raza: Pakistan தோல்விக்கு பின் Phone Snatch | Aanee's Appeal | *Cricket

58 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோரில் தடுமாறிய இலங்கை அணி 170 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை துரத்த முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் செம கடுப்பில் இருந்தனர். இந்த நிலையில், இந்தப் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா மைதானத்தில் வந்து பார்த்தார்.

செய்தியாளர்கள் கேள்வி

செய்தியாளர்கள் கேள்வி

தங்களது அணி தோல்வியுற்ற விரக்தியில், ரமிஸ் ராஜா மைதானத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் தோல்வி குறித்து பல கேள்வியை எழுப்பினர். மைதானத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலியும் இருந்ததால், இந்தியா, பாகிஸ்தான் இருத்தரப்பு தொடர் குறித்து பேசுனீர்களா என்ற கேள்வி எழுப்பட்டது.

கங்குலியிடம் பேசவில்லை

கங்குலியிடம் பேசவில்லை

அதற்கு பதில் அளித்த ரமிஸ் ராஜா, இல்லை. நான் கங்குலியிடம் எதை பற்றியும் பேசவில்லை என்று பதில் அளித்தார். அப்போது இந்திய செய்தியாளர் ஒருவர், இந்த தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் எதாவது சொல்ல விரும்புறீர்களா என்று கேட்டார்.

செல்போனை பிடுங்கினார்

செல்போனை பிடுங்கினார்

அதற்கு, நீங்கள் இந்தியர் தானே. உங்களுக்கு பாகிஸ்தானின் தோல்வி மகிழ்ச்சியை கொடுக்கும் என்று பதில் அளித்தார். அப்போது அதற்கு அந்த செய்தியாளர், அப்படி எல்லாம் இல்லை என்று கூறிய உடன், திடீரென்று, இந்திய பத்திரிகையாளரின் செல்போனை ரமீஸ் ராஜா பிடுங்கினார்.

கண்டுகொள்ளாத கங்குலி

இதனையடுத்து, சுதாரித்து கொண்ட ரமிஸ் ராஜா, பத்திரிகையாளரிடமே செல்போனை கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரமிஸ் ராஜா வின் இந்த செயல் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் அந்த பத்திரிகையாளர் புகார் அளிக்க காததிருந்தார். ஆனால், கங்குலி அவரை சந்திக்காமலேயே சென்றுவிட்டார்.

Story first published: Wednesday, September 14, 2022, 11:48 [IST]
Other articles published on Sep 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+