Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம ருத்துராஜா இது.. ? செல்பி எடுக்க வந்த கிரவுண்ட் மேன்.. அவமரியாதை செய்தாரா கெய்க்வாட்.. வீடியோ

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், செல்பி எடுக்க வந்த மைதான பராமரிப்பாளரை நடத்திய விதம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நடப்பு தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட், ஒரு போட்டியில் மட்டும் தான் அரைசதம் அடித்தார். மற்ற 4 போட்டியிலும் சொதப்பினார்.

கடந்த 5 போட்டியில் ருத்துராஜ் 23, 1, 57, 5, 10 ஆகிய 5 இன்னிங்சை சேர்த்து மொத்தம் 96 ரன்கள் மட்டும் தான் அடித்துள்ளார்.

செல்ஃபிக்கு நோ

செல்ஃபிக்கு நோ

இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்தது. அப்போது மைதானத்தின் எல்லை கோட்டில் உள்ள Dug out இல் ருத்துராஜ் அமர்ந்து கொண்டு இருந்தார், அப்போது மைதான பராமரிப்பாளர் ஒருவர் திடீரென்று வீரர்கள் பகுதியில் நுழைந்து ருத்துராஜ் கெய்க்வாடிடம் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனை பார்த்த ருத்துராஜ், மைதான பராமரிப்பாளரை நகர்நது செல்லும் படி சைகை காட்டினார்.

ருத்துராஜ் செயல்

ருத்துராஜ் செயல்

ஆனால், அது பிறகும் அந்த நபர் செல்ஃபி எடுக்க முயன்றவுடன் ருத்துராஜ் வேறு இடத்திற்கு திரும்பிவிட்டார். இதனால் அந்த கிரவுண்ட்மேன் ஏமாற்றத்துடன் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பரவி வருகிறது. பொதுவாக கிரவுண்ட்ஸ் மேனுடன் அனைத்து வீரர்களும் நட்போடு பழகுவார்கள்.

வீரர்களின் நண்பர்கள்

வீரர்களின் நண்பர்கள்

2008ஆம் ஆண்டு சென்னை டெஸ்ட் போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்ற போது, சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த மைதான பராமரிப்பாளர்கள் தான் சச்சினுக்கு ஓடி வந்து கை கொடுப்பார்கள், அவர்களுடன் சச்சினும் கை குலுக்குவார். தோனி, டிராவிட் போன்ற வீரர்களும் மைதான பராமரிப்பாளர்களுக்கு அவ்வப்போது பரிசுத் தொகையும் வழங்குவார்கள்.

கொரோனா காரணமா?

ஆனால் இது கொரோனா காலம் என்பதால் ருத்துராஜ் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். பிசிசிஐ தற்போது தீவிர பயோ பபுளை கடைப்பிடிக்கவில்லை. அப்படி இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார் என்ற கேள்வியும் எழுந்தது. ருத்துராஜ் இதுவரை 2 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இப்படி செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Sunday, June 19, 2022, 23:28 [IST]
Other articles published on Jun 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+