Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

30 மீட்டர் வரை பறந்த பைல்ஸ்.. தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக்.. தீயாக பரவும் வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக் வழக்கம் போல் தனது அபார பந்துவீச்சால் பேட்ஸ்மேன் ஸ்டெம்பை நாக் அவுட் செய்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிகளில் விளையாடிய உம்ரான் மாலிக் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்று வருகிறார்.

தெறித்த பைல்ஸ்

தெறித்த பைல்ஸ்

நியூசிலாந்து அணியின் அபாயகரமான வீரராக கருதப்படும் மைக்கேல் பிரேஸ்வெல் நேற்று பேட்டிங் இருக்கு வந்தார். அப்போது ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தை உம்ரான் மாலிக் வீசினார். 148.6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அந்த பந்து ப்ராஸ்வெல் ஸ்டம்பை பதம் பார்த்தது.

30 மீட்டர்

இதில் ஸ்டெம்பில் இருக்கும் பைல்ஸ் 30 மீட்டர் சர்க்கிள் தாண்டி விழுந்தது. இதேபோன்று நேற்றைய ஆட்டத்தில் டேரல் மிட்செல் விக்கெட்டையும் உம்ரான் மாலிக் வீழ்த்தினார். இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசிய உம்ரான் மாலிக் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி ஆதரவு

ரவி சாஸ்திரி ஆதரவு

இந்த நிலையில் உம்ரான் மாலிக்கை தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எதிரணிக்கு பயத்தை அளிக்கக்கூடிய வீரராக உம்ரான் மாலிக் திகழ்வதாக குறிப்பிட்ட அவர் பும்ராவும் இந்திய அணியில் சேர்ந்தால் பந்துவீச்சு பலமாக இருக்கும் என அவர் கூறினார். உம்ரான் மாலிக் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுக்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்கனவே கம்பீர் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

இது தொடர்பாக பேசிய அவர் ரன்களை கட்டுப்படுத்துவதை விட விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்தான் அணிக்கு தேவை என்று அவர் கூறினார். மேலும் உம்ரான் மாலிக் ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் தான் விட்டுக் கொடுக்கிறார் தவிர பெரிய அளவில் சொதப்புவது இல்லை என்றும் அவர் ஆதரவு கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 2, 2023, 21:26 [IST]
Other articles published on Feb 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+