Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களை அடித்து நொறுக்கிய பாக். வீரர் ஹசன் அலி.. கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. அதிர்ச்சி வீடியோ !

லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, ரசிகரை அடித்து நொறுக்கிய காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

28 வயதான பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, அண்மையில் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து உள்ளூர் போட்டியில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஹசன் அலி விளையாடுகிறார் .

சாம்பியன்ஸ் டிராபி ஹீரோ

சாம்பியன்ஸ் டிராபி ஹீரோ

பாகிஸ்தான் அணிக்கு கடைசியாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடினார். இலங்கைக்கு எதிராக கடைசியாக விளையாடிய அந்த ஆட்டத்தில் அவர் மூன்று ஓவரில் 25 ரன்கள் விட்டுகொடுத்தார். விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. திறமை வாய்ந்த வீரராக கருதப்படும் ஹசன் அலி சாம்பியன்ஸ் டிராபி 2017 ஆம் ஆண்டு தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

அணியிலிருந்து நீக்கம்

அணியிலிருந்து நீக்கம்

இந்தியா தோல்வியை தழுவிய இறுதி ஆட்டத்தில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 19 ரகளை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அந்தத் தொடரில் அதிகபட்சமாக 13 விக்கெட்டுகளை ஹசன் அலி வீழ்த்தி இருந்தார். தற்போது 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 90 விக்கெட்டுகளையும் டி20 கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும் ஹசன் அலி வீழ்த்தி இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்த ஹசன் அலி காயம் காரணமாக அவ்வப்போது அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஹசன் அலியின் பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஹசன் அலி ஒரு முக்கியமான கேட்சை தவறவிட்டார். இதன் காரணமாக அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.இந்த நிலையில் ஹசன் அலி பஞ்சாப் மாகாணத்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.அப்போது பவுண்டரி லைனில் இருந்த ரசிகர்கள் கடந்த ஆண்டு தவறவிட்ட கேட்ச்க்கு தற்போது அவரை கிண்டல் செய்தனர்.

ஹசன் அலி மோதல்

முதலில் பொறுத்துக் கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்திய ஹசன் அலியை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் வம்பு இழுத்தனர்.இதை அடுத்து போட்டி முடிந்தவுடன் நேரடியாக பார்வையாளர்கள் மாடத்திற்கு சென்ற ஹசன் அலி கிண்டல் செய்தவரை கடுமையாக உதைத்து தாக்கினார். இதனால் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த சிலர், ஹசன் அலியை தாக்கும் முயன்றனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்த பாதுகாவலர்கள் ஹசன் அலியை விலக்கிவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹசன் அலி

Story first published: Monday, December 5, 2022, 23:30 [IST]
Other articles published on Dec 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+