முகமது ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள்.. பெங்களூரு டெஸ்டில் ருசிகரம்..
பெங்களூரு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை அணி 109 ரன்கள் எடுத்தது.
143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தின் போது பவுண்டரி லைனில் இந்திய வீரர் முகமது ஷமி நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த விஜய் ரசிகர்கள் சிலர், முகமது ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் குறித்து கேட்டனர். ஆனால் அதற்கு முகமது ஷமி எந்த பதிலையும் கூறவில்லை.
ஏற்கனவே கடந்த ஆண்டு சென்னையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் அஜித் ரசிகர்கள் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு தொல்லை செய்தனர். அப்போது, அவர் வலிமை என்றால் என்ன என்று தினேஷ் கார்த்திக்கிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
தற்போது விஜய் ரசிகர்களும் அதே பாணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்சன் அனிருத் கூட்டணியில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரலில் ரீலிசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் டீசர், பாடல் வெளியீட்டு விழா குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், கிரிக்கெட் வீரர்களிடம் பீஸ்ட் அப்டேட் குறித்து கேட்க தொடங்கினர்.


Click it and Unblock the Notifications