Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானத்தில் நடனமாடிய கோலி..!! கிண்டல் அடித்த ரோகித் சர்மா..!! ரசிகர்களை கவர்ந்த வீடியோ இதோ..!!

அகமதாபாத்: இந்தியா Vs மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்த சேட்டை இணையத்தை கலக்கி வருகிறது.

Recommended Video

மைதானத்தில் நடனமாடிய கோலி..!! கிண்டல் அடித்த ரோகித் சர்மா..!! ரசிகர்களை கவர்ந்த வீடியோ இதோ..!!

2வது ஒருநாள் போட்டியை இந்தியா வென்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி 238 ரன்கள் என்ற குறைந்த இலக்கை மட்டுமே நிர்ணயித்தது.

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு 193 ரன்களில் மேற்கிந்திய தீவுகளை சுருட்டினர்.

100வது போட்டி

100வது போட்டி

குறிப்பாக பிரஷித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷர்துல் தாக்கூர், சாஹல் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகள் வீரருக்கு நல்ல நெருக்கடியை தந்தனர். இந்த நிலையில், நேற்றைய போட்டி விராட் கோலி சொந்த மண்ணில் களமிறங்கிய 100வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

கோலி கேட்ச்

கோலி கேட்ச்

பேட்டிங்கில் விராட் கோலி சொதப்பினாலும், ஃபில்டிங்கில் அவர் கில்லியாகவே செயல்படுகிறார். நேற்று ஓடியன் ஸ்மித் அதிரடியாக விளையாடி இந்திய அணியை பயமுறுத்தினார். இதனால், ரோகித் வாசிங்டன் சுந்தரை பந்துவீச அழைத்தார். ஓடியன் ஸ்மித் சிக்ஸ் அடிக்க டிரை செய்த பந்தை விராட் கோலி அபாரமாக கேட்ச் பிடித்தார்.

மைதானத்தில் நடனம்

மைதானத்தில் நடனம்

கேட்ச் பிடித்து கீழே விழுந்ததில், அவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. ஆனால், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதால் கோலி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று, மைதானத்திலேயே கெத்தாக நடனமாடியே நடந்து வந்தார். இதனை பார்த்து ரோகித் சர்மா கிண்டல் செய்தார்.

மீம்ஸ்

விராட் கோலியின் இந்த சேட்டை தற்போது மீம்சாக மாறிவிட்டது. அரசு வேலை கிடைத்துவிட்டால் உறவினர்கள் முன் இப்படி தான் நடப்பேன் என்று விராட் கோலியின் வீடியோவை போட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியில் உற்சாகமாக இருப்பது காண்போரை கவர செய்துள்ளது.

Story first published: Thursday, February 10, 2022, 13:11 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+