நீங்க டெல்லிக்கு போனா விராட் கோஹ்லியை நேரில் சந்திக்கலாம்!
டெல்லி:இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து பலரும் சிலையாக நின்றிருப்பார்கள். தற்போது, விராட் கோஹ்லியே சிலையாக நிற்கிறார்.
உலகப் புகழ்பெற்ற மேடம் துஸாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் டெல்லியில் உள்ளது.
இங்கு உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலருடைய மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற பிரபல தடகள வீரர் உசேன் போல்ட், கால்பந்து வீரர்கள் ரொன்ல்டோ, மெஸ்ஸி உள்ளிட்டோருக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

கபில்தேவ், சச்சின்
பிரபல நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், பிரபல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோரின் மெழுகு சிலை இடம்பெற்றுள்ளது.

மிகப் பெரிய கவுரவம்
இவ்வாறு இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படுவது என்பது மிகவும் கவுரவமாகும். அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும் இடம் பிடித்துள்ளார்.

அச்சு அசலாக
கோஹ்லியின் முழு உருவ மெழுகு சிலையைப் பார்த்தால் அச்சு அசலாக கோஹ்லியே நிற்பதுபோல் உள்ளது. அவருடைய ஹேர்ஸ்டைல், கூர்மையான பார்வை, பேட்டை பிடிக்கும் லாவகம், கைகளில் உள்ள டாட்டூக்கள் என, கடந்த 6 மாதங்களாக பல கலைஞர்கள் இணைந்து இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.

சிலை திறப்பு
இனி நீங்க டெல்லிக்குப் போனா, விராட் கோஹ்லியை நேரிடையாக பார்க்க முடியும். அந்த அளவுக்கு,நேரில் பார்ப்பதுபோன்ற தத்ரூபமான கோஹ்லியின் மெழுகு சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications