Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

18 வயதில் வரலாற்று சாதனை.. ஆஸ்திரேலிய வீராங்கனை லூசி ஹாமில்டன் புதிய பிக் பாஷ் லீக் ரெக்கார்டு

சிட்னி: 2025 மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் 18 வயதே ஆன வேகப் பந்துவீச்சாளர் லூசி ஹாமில்டன் ஒரே டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்து இருக்கிறார். பள்ளிக்கு செல்லாமல் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடி வருகிறார் லூசி ஹாமில்டன்.

அவர் இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஆவார். 18 வயது ஆகும் அவர் இந்த ஆண்டு முதன்முதலாக மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் இடம் பெற்று இருக்கிறார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்று ஆடினார். இதுவரை பிக் பாஷ் லீக் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தி இருக்காத அவர் இந்த தொடரில் தனது முதல் விக்கெட்டை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக வீழ்த்தினார்.

wbbl big bash league

தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவர்களில் 8 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் ஒரு பந்துவீச்சாளரின் இரண்டாவது மிகச் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும், மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களிலேயே இளம் பந்துவீச்சாளர் என்ற சாதனையை லூசி ஹாமில்டன் செய்து இருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிகஸ் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடி வருகிறார்.

ஜெமிமா இந்தப் போட்டியில் 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இருந்தார். சார்லி நாட் 35 ரன்கள், ஜார்ஜியா 19 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஜெஸ் ஜொனாசன் 17 ரன்கள் எடுத்தார். பிரிஸ்பேன் ஹீட் அணி இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

Story first published: Monday, November 18, 2024, 10:14 [IST]
Other articles published on Nov 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+