மோதியது 10... வென்றது 3.. தோற்றது 7... இது ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் கதை!
சிட்னி: உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 10 முறை மோதியதில் அதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பைப் போட்டிதான். பலரும் இந்தியாதான் இதில் வெல்லும் என்று உறுதியாக கூறி வருகின்றனர். காரணம், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா பிரமாதமாக ஆடி வருவதால்.

அதேசமயம் புள்ளி விவரங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே உள்ளன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை புள்ளி விவரங்கள் பெரிய அளவில் கை கொடுக்காது. அன்று எப்படி ஆடுகிறோமோ அதுதான் நிற்கும்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை மோதல்கள் குறித்த ஒரு சுவாரஸ்ய பிளாஷ்பேக்...
- 1983ம் ஆண்டு நாட்டிங்காமில் நடந்த போட்டியில் இந்தியாவை 162 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
- 1983ம் ஆண்டு செம்ஸ்போர்டில் நடந்த போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- 1987ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
- அதே 1987ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
- 1992ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- 1996ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- 1999ம் ஆண்டு ஓவலில் நடந்த போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- 2003ல் செஞ்சூரியனில் நடந்த போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- 2003ம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்கில் நடந்த போட்டியில், 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- 2011ல் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
Story first published: Sunday, March 22, 2015, 16:09 [IST]
Other articles published on Mar 22, 2015


Click it and Unblock the Notifications