Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் முதல் முறையாக.. முதல் மூன்று போட்டிகளையும் வென்று இந்தியா சாதனை!

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பை தொடர் ஒன்றில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்தியா.

1975ம் ஆண்டு உலக கோப்பை தொடர் அறிமுகமானபோதில் இருந்து இந்தியா பங்கேற்று வருகிறது. 1983 மற்றும் 2011 உலக கோப்பைகளில் இந்தியா சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. ஆனால் உலக கோப்பை தொடர்களில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதில்லை.

இந்த சோகத்தை இன்று மாற்றியுள்ளது இந்தியா.

இந்தியா ஒவ்வொரு உலக கோப்பைகளிலும் மோதிய முதல் 3 போட்டிகள் குறித்த ஒரு பார்வை:

முதல் போட்டியே தோல்வி

முதல் போட்டியே தோல்வி

1975 உலக கோப்பையில் இங்கிலாந்திடம் 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

மூன்றும் தோல்வி

மூன்றும் தோல்வி

1979 உலக கோப்பையின்போது, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து, 47 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆகிய நாடுகளிடம் அடுத்தடுத்து தோற்றது இந்தியா.

ஆஸ்திரேலியா குறுக்கீடு

ஆஸ்திரேலியா குறுக்கீடு

1983 உலக கோப்பையின்போது மேற்கிந்திய தீவுகளை 34 ரன்களிலும், ஜிம்பாப்வேயை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோற்கடித்த இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் 162 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வாய்ப்பை தவறவிட்டது.

மீண்டும் ஆஸ்திரேலிய தடை

மீண்டும் ஆஸ்திரேலிய தடை

1987 உலக கோப்பையின்போது, 1 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, 16 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வெற்றி கண்டது.

இங்கிலாந்திடம் தோல்வி

இங்கிலாந்திடம் தோல்வி

1992 உலக கோப்பையின்போது இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இலங்கையுடனான அடுத்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போதும் ஆஸ்திரேலியா

இப்போதும் ஆஸ்திரேலியா

1996ல் கென்யாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், மேற்கிந்திய தீவுகளை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்திய இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

2 போட்டிகளில் தோல்வி

2 போட்டிகளில் தோல்வி

1999 உலக கோப்பையின்போது, தென் ஆப்பிரிக்காவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயிடம் 3 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்ற இந்தியா, இலங்கைக்கு எதிராக 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மீண்டும் ஆஸ்திரேலியா தடை

மீண்டும் ஆஸ்திரேலியா தடை

2003 உலக கோப்பையில் நெதர்லாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. ஜிம்பாப்வேயை 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

2007 உலக கோப்பையில் வங்கதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா, பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கையிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

டையானதால் சிக்கல்

டையானதால் சிக்கல்

2011ல் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா, 2வது போட்டியில் இங்கிலாந்துடன் மோதியது. ஆனால் அந்த போட்டி டையில் முடிந்தது. அயர்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

வரலாற்றில் முதல் முறை

வரலாற்றில் முதல் முறை

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு 2015 நடப்பு உலக கோப்பையில்தான் முதல் மூன்று போட்டிகளையும் இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்காவை 130 ரன்கள் வித்தியாசத்திலும் வென்ற இந்தியா, யு.ஏ.இ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்து வரலாறு படைத்துள்ளது.

Story first published: Saturday, February 28, 2015, 17:19 [IST]
Other articles published on Feb 28, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+