Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளையும், 29ம் தேதியும் அடித்துத் துவைத்து ஹாங்கரில் தொங்கப் போட்டால்.... அது வரலாறு பாஸ்!

பெங்களூர்: உலகக் கோப்பைப் போட்டியில் புதிய வரலாறு படைக்கக் காத்திருக்கிறது இந்தியா. அரை இறுதியிலும், இறுதிப் போட்டியிலும் அது வென்றால் இந்த வரலாறு எழுதப்படும்.

அதாவது போட்டியை நடத்தும் இரு நாடுகளை அரை இறுதியிலும், இறுதிப் போட்டியிலும் இதுவரை யாருமே வென்றதில்லை. எனவே நாளைய அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், அடுத்து இறுதிப் போட்டியில் நியூசிலாந்தையும் இந்தியா வீழ்த்தினால் அது புது சாதனையாகும்.

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்துதான் தற்போதைய உலகக் கோப்பைப் போட்டித் தொடரை நடத்துகின்றன என்து குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் முடிவுகள் விவரம்:

1975ல் இங்கிலாந்தில்

1975ல் இங்கிலாந்தில்

1975ம் ஆண்டு முதலாவது உலகக் கோப்பைத் தொடரை இங்கிலாந்து நடத்தியது. அதில் அரை இறுதியில், நியூசிலாந்தையும், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கு இந்தியத் தீவுகள்.

1979ல் மீண்டும் இங்கிலாந்தில்

1979ல் மீண்டும் இங்கிலாந்தில்

1979ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்தில் போட்டிகள் நடந்தன. இதில் அரை இறுதியில், பாகிஸ்தானையும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் மேற்கு இந்தியத் தீவுகள் வீழ்த்தி பட்டத்தைத் தக்க வைத்தது.

1983ல் மறுபடியும் இங்கிலாந்தில்

1983ல் மறுபடியும் இங்கிலாந்தில்

1983ம் ஆண்டு போட்டியும் இங்கிலாந்திலேயே நடந்தது. அதில் இந்தியா அரை இறுதியில் இங்கிலாந்தையும், இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளையும் வீழ்த்தி புதிய சாம்பியனாக உருவெடுத்தது.

1987ல் இந்தியா - பாக்.கில்

1987ல் இந்தியா - பாக்.கில்

1987ம் ஆண்டு போட்டி இந்தியா, பாகிஸ்தானில் நடந்தது. அதில் அரை இறுதியில் பாகிஸ்தானையும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல் முறையாக சாம்பியன் ஆனது.

1992ல் ஆஸி - நியூசிலாந்தில்

1992ல் ஆஸி - நியூசிலாந்தில்

1992 தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தின. அதில் அரை இறுதிப் போட்டியில், நியூசிலாந்தையும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி சாம்பியன் ஆனது பாகிஸ்தான்.

1996ல் இந்தியா, பாக், இலங்கை

1996ல் இந்தியா, பாக், இலங்கை

1996 தொடரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை இணைந்து நடத்தின. இதில் அரை இறுதியில் இந்தியாவையும், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இலங்கை சாம்பியன் ஆனது.

1999ல் இங்கிலாந்தில்

1999ல் இங்கிலாந்தில்

1999ம் ஆம்டு தொடர் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, நெதர்லாந்தில் நடந்தது. இதில் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவையும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

2003ல் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா

2003ல் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா

2003 தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா நாடுகளில் நடந்தது. அதில் அரை இறுதியில் இலங்கையையும், இறுதிப் போட்டியில் இந்தியாவையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா 3வது முறையாக சாம்பியன் ஆனது.

2007ல் மேற்கு இந்தியத் தீவுகளில்

2007ல் மேற்கு இந்தியத் தீவுகளில்

2007 தொடர் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்தது. அதில் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவையும், இறுதிப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 3வது முறையும், மொத்தமாக 4வது முறையும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

2011ல் இந்தியா- இலங்கை- வங்கதேசம்

2011ல் இந்தியா- இலங்கை- வங்கதேசம்

2011 தொடரை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில், அரை இறுதியில் பாகிஸ்தானையும், இறுதிப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.

2015ல் என்ன நடக்கும்?

2015ல் என்ன நடக்கும்?

தற்போதைய தொடரை ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன. அரை இறுதியில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குப் போய் விட்டது. அடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா இன்னொரு அரை இறுதியில் நாளை மோதவுள்ளன. நாளைய போட்டியில் இந்தியா வென்று, மீண்டும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தையும் வீழ்த்தினால் புதிய வரலாறாக அது அமையும்.

பார்க்கலாம்.. நடக்குமா என்று!

Story first published: Wednesday, March 25, 2015, 13:48 [IST]
Other articles published on Mar 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+