For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி தொடர்களில் மட்டும் டோணி பெஸ்ட் கேப்டனாக மாறுவது மர்மமா இருக்கே... கங்குலி சொல்கிறார்!

By Veera Kumar

ஹாமில்டன்: ஐசிசி தொடர்கள் போன்ற பெரிய போட்டிகளின்போது டோணி ஒரு கேப்டனாக பிரமாதமாக செயல்படும் விதம் எனக்கு மர்மமாக இருக்கிறது என்று கூறினார், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

டோணி தலைமையில், இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 12 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி பெற்ற '11 வெற்றிகள்' என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஒரே தோல்வி

ஒரே தோல்வி

கடந்த உலக கோப்பையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், டோணி தலைமையிலான அணி, உலக கோப்பையில் இதுவரை ஒரேயொரு போட்டியில்தான் தோற்றுள்ளது. அது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியாகும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி டை ஆகியது. மற்றபடி அனைத்து போட்டிகளிலும், இந்தியாவுக்கு ஜெயம்தான்.

கங்குலி சாதனை முறியடிப்பு

கங்குலி சாதனை முறியடிப்பு

2003 உலக கோப்பையில், கங்குலி தலைமையிலான, இந்திய அணி பெற்ற தொடர்ச்சியான 8 வெற்றி சாதனையையும், டோணி, முறியடித்துள்ளார்.

ஐசிசி என்றால் தனிதான்

ஐசிசி என்றால் தனிதான்

இந்நிலையில், கங்குலி கூறியதாவது: ஐசிசி தொடர்கள் போன்ற பெரிய போட்டித்தொடர்களின்போது டோணியின் கேப்டன்ஷிப் வியப்பை தருகிறது. பிற போட்டிகளில் இருந்ததைவிட முற்றிலுமாக டோணி அப்போது மாறிவிடுகிறார்.

மர்மம்

மர்மம்

பிற போட்டிகளின்போது, டோணியின் கேப்டன்ஷிப் மிக சாதாரணமாகவே தென்படுகிறது. ஆனால் ஐசிசி தொடர்களில், அவர் விஸ்வரூபம் எடுப்பது மர்மமாகவே உள்ளது.

கோபப்படுவாரே..

கோபப்படுவாரே..

டோணி மிகவும் கூல் கேப்டன் என்பதால்தான், வெற்றி சாத்தியம் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது மட்டுமே வெற்றிக்கான காரணம் கிடையாது. டோணியும் பல நேரங்களில் கோபப்பட்டுள்ளார். ஆனால் கோபத்தை நெறிப்படுத்தும் திறமை அவரிடம் உள்ளது.

நல்ல வீரரும் கூட

நல்ல வீரரும் கூட

நடப்பு உலக கோப்பை தொடரில், ஒரு கேப்டனாக மட்டுமின்றி, வீரராகவும், சிறப்பான பங்களிப்பை டோணி அளித்து வருகிறார்.

யார் சிறந்த கேப்டன்?

யார் சிறந்த கேப்டன்?

இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் டோணியா, அல்லது நானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இந்த கேள்விக்கு விடை சொல்வது கடினம். ஆனால், என்னால் உலக கோப்பையை வென்று தரமுடியவில்லை, அதை டோணி சாதித்துள்ளார் என்பதை பெருமையுடன் கூற முடியும். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 11, 2015, 12:07 [IST]
Other articles published on Mar 11, 2015
English summary
Former Indian cricketer Sourav Ganguly on Tuesday praised Mahendra Singh Dhoni who led India to their fifth consecutive victory in the ICC World Cup which is being held in Australia and New Zealand and the ninth straight victory overall.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+