Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி கெயில், அசத்தல் தவான்... உலக கோப்பையில் அதிக ரன் குவித்த டாப் 10 பேட்ஸ்மேன்கள்!

சிட்னி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி ஒருவாரம் கடந்து விட்டது. அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதும் இன்றைய போட்டி இத்தொடரின் 16வது போட்டியாகும்.

இந்த நேரத்தில், இதுவரை உலக கோப்பையில் விளாசி தள்ளிய பேட்ஸ்மேன்கள் குறித்த ஒரு பார்வை அவசியமாகும். பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் என்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் மைதானங்கள் வர்ணிக்கப்பட்டாலும், உலக கோப்பைக்காக அதில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகவும் மாற்றியுள்ளனர். எனவே 300 ரன்கள் என்பது சகஜமாக போய்விட்டது. எனவே ரசிகர்களும் பேட்ஸ்மேன்களின் வான வேடிக்கையை கண்டு ரசிக்கின்றனர்.

டாப் பேட்ஸ்மேன்கள் பற்றிய ஒரு பார்வை இதோ...

அதிரடி கெயில்

அதிரடி கெயில்

ஜிம்பாப்வேக்கு எதிரான, ஒரே போட்டியில் 215 ரன்களை விளாசியதன் விளைவு, அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் முதலிடம் மே.இ.தீவுகளின் கிறிஸ் கெயிலுக்குத்தான். அவர் 3 போட்டிகளில், 255 ரன்களை குவித்துள்ளார். சராசரி 85 ரன்களாகும்.

தவான் அசத்தல்

தவான் அசத்தல்

இந்த பட்டியலில் இரண்டாவது இடம் இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு கிடைத்துள்ளது. இரண்டே போட்டிகளில் தவான் 210 ரன்களை குவித்து, 105 என்ற அபார பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 137 ரன்கள் குவித்தது இவரது அதிகபட்ச ரன்னாகும்.

சாமுவேல்ஸ்

சாமுவேல்ஸ்

மே.இ.தீவுகளின் மார்லன் சாமுவேல்ஸ் 2 போட்டிகளில் களமிறங்கி 192 ரன்களை குவித்து, 96 என்ற சராசரி வைத்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக எடுத்த 133 ரன்கள் இவரது அதிகபட்சமாகும்.

குட்டி நாட்டில் ஒரு கலக்கல் வீரர்

குட்டி நாட்டில் ஒரு கலக்கல் வீரர்

1996க்கு பிறகு இப்போதுதான் உலக கோப்பைக்குள் எட்டிப் பார்க்கும், குட்டிநாடான ஐக்கிய அரபு எமிரேட்டின் பேட்ஸ்மேன் சைமான் அன்வர் 173 ரன்களுடன் இந்த கவுரவ பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் இன்றைய அயர்லாந்துக்கு எதிராக எடுத்த 106 ரன்களுடன், இரு போட்டிகளில் மொத்தம் 173 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 86.50 ரன்களாகும்.

தென் ஆப்பிரிக்க மில்லர்

தென் ஆப்பிரிக்க மில்லர்

தென் ஆப்பிரிக்க லோவர் மிடில் ஆர்டர் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர், 2 போட்டிகளில் ஆடி, 160 ரன்கள் விளாசியுள்ளார். ஜிம்பாப்வேகுக்கு எதிராக எடுத்த 138 ரன்கள் இவரது பெஸ்ட் ஆகும்.

ஜிம்பாப்வே வீரரும் அசத்தல்

ஜிம்பாப்வே வீரரும் அசத்தல்

ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ் 3 போட்டிகளின் மூலம் 160 ரன்கள் குவித்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிரான 76 இவரது அதிகபட்ச ரன்.

இங்கிலாந்திலும் ஒருவர்

இங்கிலாந்திலும் ஒருவர்

இங்கிலாந்து தொடக்க வீரர் மொயீன் அலி ஸ்காட்லாந்துக்கு எதிராக அடித்த 128 ரன்களின் உதவியுடன் 3 போட்டிகளில் எடுத்த 158 ரன்களுடன் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சராசரி-52.66.

அதிரடி மெக்கல்லம்

அதிரடி மெக்கல்லம்

நியூசிலாந்தின் அதிரடி வீரரும், கேப்டனுமான பிரென்டன் மெக்கல்லம், இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக குவித்த 77 ரன்கள் உதவியுடன் 3 போட்டிகளில் மொத்தம் 157 ரன்களை எடுத்துள்ளார். சராசரி-52.

இது நம்மாளு..

இது நம்மாளு..

இந்தியாவின் விராட் கோஹ்லி, 2 போட்டிகளில் ஆடி 153 ரன்கள் குவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக விளாசிய 107 இவரது அதிகபட்ச ரன்னாகும். பேட்டிங் சராசரி 76.50.

மீண்டும் ஒரு மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்

மீண்டும் ஒரு மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்

மே.இ.தீவுகளின் சிம்மன்ஸ் 3 போட்டிகளில் மொத்தம் 152 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அயர்லாந்துக்கு எதிராக விளாசிய 102 ரன்களும் உள்ளடங்கும்.

Story first published: Wednesday, February 25, 2015, 15:35 [IST]
Other articles published on Feb 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+