Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் இதுவரை... அதிக விக்கெட்டுகளை சாய்த்த டாப் 10 பவுலர்கள்!

சிட்னி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி ஒருவாரம் கடந்து விட்டது. அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதும் இன்றைய போட்டி இத்தொடரின் 16வது போட்டியாகும்.

இந்த நேரத்தில், இதுவரை உலக கோப்பையில் ஜொலித்த பந்து வீச்சாளர்கள் குறித்த ஒரு பார்வை அவசியமாகும். பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் என்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் மைதானங்கள் வர்ணிக்கப்பட்டாலும், உலக கோப்பைக்காக அதில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகவும் மாற்றியுள்ளனர். எனவே 300 ரன்கள் என்பது சகஜமாக போய்விட்டது.

இந்த சூழ்நிலையிலும், விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பந்து விச்சாளர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்தானே..

முதலிடத்தில் சவுத்தி

முதலிடத்தில் சவுத்தி

சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் நியூசிலாந்தின் டிம் சவுத்தி. 3 போட்டிகளின் மூலம், 11 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதில் சிறந்த ஆட்டமாகும்.

ஜெரோம் டைலர்

ஜெரோம் டைலர்

மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் டைலர் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது இவரது பெஸ்ட் ஆகும்.

இத்தனை அடி வாங்கியும் அபாரம்

இத்தனை அடி வாங்கியும் அபாரம்

இங்கிலாந்து அடிமேல் அடி வாங்கி வந்தாலும், அதன் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் சீராக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அவர் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஸ்காட்லாந்தில் இருந்தும்..

ஸ்காட்லாந்தில் இருந்தும்..

இந்த பட்டியலில் ஆச்சரியப்படத்தக்க ஒரு வரவு, ஜோஸ் தாவே. குட்டி நாடான ஸ்காட்லாந்து பவுலரான இவர் இரண்டே போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் இங்கிலாந்துக்கு எதிராக 68 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்தது பெஸ்ட் ஆகும்.

அனுபவம் பேசுகிறது

அனுபவம் பேசுகிறது

நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸ்காட்லாந்துக்கு எதிராக 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது பெஸ்ட்.

எங்ககிட்டையும் இருக்காங்க..

எங்ககிட்டையும் இருக்காங்க..

இந்தியாவிலும் விக்கெட் டேக்கர் உள்ளார் என்பதை பறைசாற்றுகிறார் முகமது ஷமி. இவர் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது பெஸ்ட் ஆகும். அடுத்த 2 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்டவையாகும்.

பாகிஸ்தான் பவுலர்

பாகிஸ்தான் பவுலர்

இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் சொகைல்கான், 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

மிட்சேல் மார்ஷ்

மிட்சேல் மார்ஷ்

இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர், மிட்சேல் மார்ஷ் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கோரி ஆன்டர்சன்

கோரி ஆன்டர்சன்

நியூசிலாந்தின் கோரி ஆன்டர்சன், 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டிரெண்ட் பவுல்ட்

டிரெண்ட் பவுல்ட்

நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் அதிகம்பேர் நியூசிலாந்து பவுலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 25, 2015, 15:27 [IST]
Other articles published on Feb 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+