Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

40 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய துரதிர்ஷ்டசாலி யார் தெரியுமா....?

பெங்களூரு: 40 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய துரதிரஷ்டசாலி என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரஹாம் கூச்சைக் கூறலாம். காரணம், அவரது வரலாறு அப்படி.

உலக கிரிக்கெட் அணிகளிலேயே இங்கிலாந்து அணியைப் போல சோக வரலாறு கொண்டது எதுவும் இருக்க முடியாது. கிரிக்கெட்டின் தாயகமாக கூறப்படுவது இங்கிலாந்து. ஆனால் இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

மேலும் உலககக் கோப்பை வரலாற்றில் 3 முறை இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட ஒரே அணி இங்கிலாந்துதான். அந்த மூன்று இறுதிப் போட்டியிலும் கிரஹாம் கூச்சும் ஆடியுள்ளார். இதுதான் மிகப் பெரிய சோகம்.

1979 இறுதிப் போட்டி

1979 இறுதிப் போட்டி

1979ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் 92 ரன் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. இந்த இறுதிப் போட்டிதான் இங்கிலாந்துக்கு முதல் இறுதிப் போட்டியாகும். அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிளைவ் லாயிட். இங்கிலாந்து அணி, மைக் பிரியர்லி தலைமையில் களம் கண்டிருந்தது.

கூச் 32

கூச் 32

பிரியர்லி டாஸ் வென்று மேற்கு இந்தியத் தீவுகளை முதலில் பேட் செய்யப் பணித்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி 60 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்களை எடுத்தது. ரிச்சர்ட்ஸ் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய இங்கிலாந்து சிறப்பாகவே தொடங்கியது. 129 ரன்கள் வரை அது விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்தது. ஆனால் பிரியர்லியும், ஜெப் பாய்காட்டும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் சரிவு வந்தது. இருப்பினும் கிரஹாம் கூச்சும், டெரிக் ரேன்டலும் சற்று நிலைத்து ஆடினர். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 48 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் கூச்சை, ஜோயல் கார்னர் காலி செய்தார். கூச் எடுத்த ரன்கள் 32.

இறுதியில் 194 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்தத் தொடரில் கூச், 53, 21, 33, 71, 32 என ரன்கள் எடுத்திருந்தார்.

1987 இறுதிப் போட்டி

1987 இறுதிப் போட்டி

அடுத்து இங்கிலாந்து அணி 1987ம் ஆண்டு தொடரின்போது இறுதிப் போட்டிக்கு வந்து சேர்ந்தது. அந்த அணியிலும் கூச் இடம் பெற்றிருந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது இங்கிலாந்து.

கூச் 35

கூச் 35

கொல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டியின்போது ஆஸ்திரேலியா கேப்டன் ஆலன் பார்டர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேவிட் பூன் 75 ரன்களைக் குவிக்க, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி துரதிர்ஷ்டவசமாக 7 ரன்களில் தோல்வியைத் தழுவியது. கிரஹாம் கூச் இப்போட்டியில் 57 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார்.

தோல்வி கண்ட அணிகளின் சந்திப்பு

தோல்வி கண்ட அணிகளின் சந்திப்பு

என்ன காமெடி என்றால் 1975ல் நடந்த முதலாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் ஆஸ்திரேலியா தோற்றிருந்தது. 79ல் நடந்த 2வது இறுதிப் போட்டியில் மேற்குஇந்தியத் தீவுகளிடம் இங்கிலாந்து தோற்றிருந்தது. இந்த இரு தோல்வி கண்ட அணிகளும் 87ல் சந்தித்தன என்பதுதான்.

அதிக ரன் குவிப்பு

அதிக ரன் குவிப்பு

இந்தத் தொடரில் கூச், 47, 84, 16, 92, 61, 115 (இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில்), 35 என ரன்கள் எடுத்திருந்தார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவரும் கூச்தான். மொத்தம் 471.

1992 இறுதிப் போட்டி

1992 இறுதிப் போட்டி

அடுத்து 1992ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்தப் போட்டித் தொடரை நடத்தியது ஆஸ்திரேலியா -நியூசிலாந்து நாடுகள்.

கேப்டனாக வந்த கூச்

கேப்டனாக வந்த கூச்

இந்த முறை இங்கிலாந்து அணியின் கேப்டனாக கூச் இருந்தார். இந்தத் தொடரில் இங்கிலாந்து நன்றாகவே ஆடியது. தொடர் முழுவதும் கூச் சிறப்பாகவே அணியை வழி நடத்தினார். அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சந்தித்தது இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்கா பிரமாதமாக ஆடியது. ஆனால் மழை வந்து தென் ஆப்பிரிக்காவின் வாழ்க்கையில் விளையாடி விட்டது. டக்வொர்த்தி விதி காரணமாக, இங்கிலாந்து தப்பிப் பிழைத்து அப்போட்டியில் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைச் சந்தித்தது இங்கிலாந்து.

சரிவைக் கண்ட இங்கிலாந்து

சரிவைக் கண்ட இங்கிலாந்து

இறுதிப் போட்டியில் கேப்டன் இம்ரான் கான் 72 ரன்களைக் குவித்தார். பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களைக் குவித்தது. அதைத் தொடர்ந்து விளையாட வந்த இங்கிலாந்து தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்களை இழந்தது. 69 ரன்களில் அது 4 விக்கெட்களை இழந்து விட்டது.

கூச் 29 மட்டுமே

கூச் 29 மட்டுமே

இறுதியில் 227 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்த இறுதிப் போட்டியில் கூச் 29 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் கூச், 51, 65, 3, 58, 8, 0, 2, 29 என ரன்கள் எடுத்திருந்தார்.

4 தொடர்கள்...21 போட்டிகள்

4 தொடர்கள்...21 போட்டிகள்

1979 முதல் 92 ம் ஆண்டு வரை மொத்தம் நான்கு உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் கலந்து கொண்ட கூச் 21 போட்டிகளில் ஆடியுள்ளார். 897 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 44.85 ஆகும். ஒரு சதமும், 8 அரை சதமும் அவர் எடுத்துள்ளார்.

கூச் சாதனை

கூச் சாதனை

உலக அளவில் ஒரு வீரர் மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற அணியில் இடம் பெற்ற சாதனை இப்போதைக்கு கூச்சிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 8, 2015, 14:31 [IST]
Other articles published on Feb 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+