கெய்ல் புயலை கோஹ்லி குடையை வைச்சு சமாளிச்சுர மாட்டோம்... நம்பிக்கையுடன் இந்தியா!
மும்பை: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான டி20 போட்டிகள் குறித்த புள்ளிவிவரத்தை சற்றே புரட்டிப் பார்த்தால் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்கிறது. ஆனால் கூடவே கோஹ்லி நினைப்பும் வரவே அந்த புள்ளிவிவர புளிக்காய்ச்சல் பறந்தோடி விடுகிறது.
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் 2வது அரை இறுதியில் மோதவுள்ளன. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி மார்ச் 31ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி அரை இறுதிக்கு வந்துள்ளது இந்தியா. அதேசமயம், முதல் 3 போட்டிகளில் கும்மென்று ஜெயி்த்து விட்டு, கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் அடி வாங்கி விட்டு அரை இறுதிக்கு வந்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள்.

இருவருக்கும் நேருக்கு நேர்
இந்தியாவும் மேற்கு இந்தியத் தீவுகளும் இதுவரை 4 டி20 போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் இரு அணிகளும் ஆளுக்கு 2 போட்டிகளில் வென்று சம பலத்தில் உள்ளன.

உலகக் கோப்பையில்
டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் 3 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 2 போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஒரு போட்டியில் வென்றுள்ளது.

2009ல்
2009ம் ஆண்டு லார்ஸ்ட் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

2010ல்
2010ம் ஆண்டு பார்படாஸில் நடந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

2014ல்
2014ம் ஆண்டு ஆண்டு மிர்பூரில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை, இந்தியா வீழ்த்தியது.

கோஹ்லியா.. கெயிலா?
இந்த முறை இந்தியாவின் கை ஓங்கியே உள்ளது. போட்டி நடைபெறுவது இந்தியாவில் என்பது மட்டுமல்ல, கோஹ்லி அட்டகாசமான பார்மில் இருக்கிறார். டோணி இருக்கிறார். நல்ல பவுலிங் உள்ளது. எனவே கெயில் புயலை கோஹ்லி என்ற கேடயத்தை வைத்து சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது.


Click it and Unblock the Notifications