Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WCL: நேரலையில் பெண் தொகுப்பாளரிடம் காதலை சொன்ன உரிமையாளர்.. வெட்கத்தில் சிவந்த முகம்

பிர்மிங்காம்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்ற உலக சாம்பியன்ஸ் லெஜென்ஸ் தொடர் கடந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. இதில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் யுவராஜ் உள்ளிட்ட பல சீனியர் வீரர்கள் பங்கேற்றதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த சீசன் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்றது. ஆனால் இந்த தொடர் பல சர்ச்சைகளை சந்தித்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இரு நாட்டுப் பிரச்சனை காரணங்கள் காட்டி வீரர்கள் விலகினர்.

WCL Owner Proposes Anchor

இதை அடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதுவதாக இருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து வெளியேறியது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் இறுதிப் போட்டியில் விளையாடினர்.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 196 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 16.5 ஓவரிலே வெற்றி இலக்கை எட்டியது. இதேபோன்று டுமினி 28 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

இந்த நிலையில் இந்தத் தொடர் முடிவடைந்த உடன் WCL தொடரின் உரிமையாளர் ஹர்ஷித் தோமருடன் கரிஷ்மா கோடக் என்ற பெண் தொகுப்பாளர் நேர்காணல் நடத்தினார். அப்போது இந்த தொடரின் வெற்றியை தாங்கள் எவ்வாறு கொண்டாடப் போகிறீர்கள் என்று அவர் கேள்வி கேட்டார்.

இதற்கு ஒன்றுமே யோசிக்காத டோமர், இந்த தொடர் முடிவடைந்து பிறகு உங்களிடம் என்னுடைய காதலை சொல்லி வெற்றியை கொண்டாட போகிறேன் என்று கூறினார். இந்த பதிலை கேட்டவுடன் அந்தப் பெண் தொகுப்பாளர் ஓ மை காட் என அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் டபிள்யு சி எல் உரிமையாளர் தோமரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். எனினும் டோமருக்கு நெருக்கமான தரப்பினர் இருவரும் ஏற்கனவே காதலித்து வருவதாகவும், அதனால் தான் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

Story first published: Sunday, August 3, 2025, 16:45 [IST]
Other articles published on Aug 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+