Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தொடரில், இந்தியாவை வொயிட் வாஷ் செய்வதே இலக்கு: தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்

கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன், டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முன்னிலை வகிப்பதோடு, தொடரையும் கைப்பற்றியது.

We are determined to win T20I series 3-0: David Miller

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 வது கிரிக்கெட் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர், டேவிட் மில்லர், நிருபர்களிடம் கூறியதாவது:

நாங்கள் இத்தொடரை, 3-0 என்று வெல்ல உறுதியாக இருக்கிறோம். தொடரை வென்றது உண்மையில் பெரிய வெற்றியே. கொல்கத்தா வரும்போதே நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதியுடன் வந்துள்ளோம். முன்னணி வீரர்களுடன் கூடிய இந்திய அணி ஒரு மிகப்பெரிய டி20 கிரிக்கெட் அணியாகும்.

நாங்கள் இங்கு வந்து வெற்றி பெறுவதற்கு ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பலர் ஆடுவதும் காரணம். ஐபிஎல் ஒரு அருமையான தொடர், நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாது இந்திய இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறது.

இந்தியாவில் விளையாடுவது உள்நாட்டில் விளையாடுவது போன்ற உணர்வைதான் தருகிறது. என்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Story first published: Wednesday, October 7, 2015, 16:52 [IST]
Other articles published on Oct 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+