Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்வே லேசுபட்ட அணி கிடையாது.. பயம்காட்டும் கேப்டன் ரஹானே

ஹராரே: ஜிம்பாப்வே அணியை எளிதாக எடுக்க முடியாது, அந்த அணி நல்ல போட்டியை கொடுக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜிங்ய ரஹானே தெரிவித்தார்.

ஜிம்பாப்வேயில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில், முதலாவது, ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இதையொட்டி, இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், இந்திய அணியின் இத்தொடருக்கான கேப்டன் ரஹானே.

வங்கதேசம் முடிஞ்சி போச்சி

வங்கதேசம் முடிஞ்சி போச்சி

ரஹானே கூறியதாவது: வங்கதேச தொடர் முடிந்துபோன ஒன்றாகும். இந்திய அணி தற்போது நடைபெறும் கிரிக்கெட் தொடர் பற்றிதான் யோசித்துக் கொண்டுள்ளது. இந்திய அணியை எப்படி, தனது முழு திறமையையும் வெளிக் கொண்டுவந்து விளையாட வைக்க வேண்டும் என்பதில்தான், முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம்.

முழு திறமை

முழு திறமை

ஜிம்பாப்வே அணியின் பலம் பற்றி யோசிப்பதில் நாங்கள் காலத்தை செலவிடவில்லை. ஜிம்பாப்வே ஒரு சிறந்த அணி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம், இந்தியா தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும். நாங்கள் வெற்றிபெறுவதற்குதான் ஜிம்பாப்வே வந்துள்ளோம்.

லேசுபட்ட அணியில்லை

லேசுபட்ட அணியில்லை

ஜிம்பாப்வே அணி, சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே எங்களுக்கு வலுவான போட்டியாளராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜிம்பாப்வே அணியை நாங்கள் இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. அதை சந்திக்க தயாராக உள்ளோம்.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

ஒருநாள் போட்டிகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நாளைய போட்டியில், நாங்கள் மிகவும் கவனத்தோடு ஆடுவோம். விதிமுறைகள் பற்றிய கவனத்தை எப்போதும் மனதில் வைத்திருப்போம். ஆட்டத்திற்கு பிறகே, புதிய விதிமுறைகளால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்பதை கூற முடியும்.

கேப்டன்ஷிப்

கேப்டன்ஷிப்

கேப்டனாக செயல்படுவது எனக்கு ஒரு புதிய சவாலாகும். நான் சில ஐடியாக்களுடன்தான் ஜிம்பாப்வே வந்துள்ளேன். எனக்கென பிரத்யேக கேப்டன்ஷிப் ஸ்டைல் உள்ளது. டோணி 'பாயி'டமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். எனவே கேப்டனாக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.

Story first published: Thursday, July 9, 2015, 17:21 [IST]
Other articles published on Jul 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+