ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்!

We are like Headless chicken, Gary Kirsten says | புலம்புகிறார் கேரி கிறிஸ்டன்

டெல்லி: தென்னாப்பிரிக்க அணி தலை இல்லாத கோழி போல சுற்றி சுற்றி வருவதாக பிரபல பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா அணி மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து தென்னாப்பிரிக்கா வைட் வாஷ் ஆகியுள்ளது.

அதிலும் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இருந்தே தென்னாப்பிரிக்க இப்படி மோசமாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே!

மோசமான நிலை

மோசமான நிலை

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் மோசமான நிலை குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபல பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் தென்னாபிரிக்க அணி மோசமாக தோல்வி அடையும் என்று தெரியும். இது எதிர்பார்க்கப்பட்ட தோல்விதான்.

தெரிந்த தோல்வி

தெரிந்த தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே தென்னாபிரிக்க அணி சரியாக விளையாடவில்லை. இங்கும் அவர்கள் சரியாக விளையடவில்லை. இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது எல்லாம் கொஞ்சமும் இயலாத காரியம்.

அம்லா

அம்லா

அணியில் இருந்து டி வில்லியர்ஸ், அம்லா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றதும் தோல்விக்கு காரணம். இதனால் தற்போது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரும் இல்லை. அதேபோல் அணி மூலம் கிரிக்கெட் கற்றுக்கொண்ட பலர் தற்போது வேறு அணிகளில் விளையாடி வருகிறார்கள். இது எங்களுக்கு பெரிய ஏமாற்றமாக மாறியது.

மோசமான நிலை

மோசமான நிலை

இதனால் தென்னாபிரிக்க அணி மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. தென்னாபிரிக்க அணியின் கோச் மீது தவறு சொல்ல முடியாது. ஆனால் முன்னாள் வீரர்கள் சிலர் தென்னாபிரிக்க அணிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் அதுதான் சரியானது.

தலை இல்லாத கோழி

தலை இல்லாத கோழி

தென்னாபிரிக்க அணியை சிலர் தலை இல்லாத கோழி போல சுற்றிவருகிறது என்று கூறி உள்ளனர். அது உண்மைதான. அணியை வழி நடத்த சரியான தலைமை இல்லை. அதனால் அணி எங்கே செல்கிறது என்ற சரியான தெளிவும் இல்லை, என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
We are running like headless chicken says Gary Kirsten about South Africa team.
Story first published: Tuesday, October 22, 2019, 16:56 [IST]
Other articles published on Oct 22, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X