Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க வெற்றி பெறுவோம்... கண்டிப்பா வெற்றி பெறுவோம்... ஜடேஜா உருக்கம்

துபாய் : இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ளது சிஎஸ்கே அணி.

இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி தகுதி பெறுவதற்கு அடுத்து ஆடவுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.

இந்நிலையில், சிஎஸ்கே கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

கிங் மேக்கர் சிஎஸ்கே

கிங் மேக்கர் சிஎஸ்கே

இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் சீசன்களில் கிங் மேக்கராக வலம் வந்துக் கொண்டிருந்தது சிஎஸ்கே அணி. இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள அந்த அணி ரசிகர்களுக்கு கொடுத்ததெல்லாம் பரபரப்பான ஆட்டங்களை மட்டுமே. பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி இதுவரை செல்லாமல் இருந்ததில்லை.

ஏமாற்றத்தை அளித்த தோனி

ஏமாற்றத்தை அளித்த தோனி

இந்நிலையில் இந்த ஆண்டு அந்த அணியின் நிலைமை மிகவும் நெருக்கடியாக உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது சிஎஸ்கே. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனியின் சிறப்பான ஆட்டங்களை ஐபிஎல்லில் கண்டு ரசிக்க காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளார் கேப்டன் தோனி.

கடுமையான பிளே-ஆப் சுற்று

கடுமையான பிளே-ஆப் சுற்று

தோனி மட்டுமின்றி அந்த அணியின் மற்ற வீரர்களும் ஏமாற்றத்தையே அளித்து வருகின்றனர். தோனியின் கேப்டன்ஷிப் குறித்தும் இந்த சீசனில் கேள்வி எழுந்துள்ளது. அடுத்து ஆடவுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று குறித்து யோசிக்க முடியும் என்ற நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

மீசையை முறுக்கும் ஜடேஜா

மீசையை முறுக்கும் ஜடேஜா

இந்நிலையில் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே கண்டிப்பாக வெற்றி கொள்ளும் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெற்றி சின்னத்துடன் அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவு ரசிகர்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, October 22, 2020, 9:00 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+