Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏலியன் போல் விளாசுகிறார்.. சூர்யகுமாரை ஒப்பந்தம் செய்ய பணமில்லை.. மேக்ஸ்வெல்லின் அசத்தல் பதில்!

மெல்போர்ன்: இந்திய வீரர் சூர்யகுமார் யாதவிற்கு பிக் பாஷ் தொடரில் விளையாட ஒப்பந்தம் கிடைக்குமா என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

டி20 கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பாணியை கையில் எடுத்து அனைத்து அணிகளுக்கு எதிராகவும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ரன்களை விளாசி வருகிறார். ஒவ்வொரு பந்திற்கும் 2 முதல் 2 ஷாட்களை வரை சூர்யகுமார் யாதவ் வைத்துள்ளதும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் டி வில்லியர்ஸ்-க்கு தம்பியை போல் ஒவ்வொரு பந்தையும் விளாசி வருவதும், எந்த நேரத்தில் களமிறங்கினாலும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் சூர்யகுமார் யாதவிற்கு பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே அவர் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

மேக்ஸ்வெல் பாராட்டு

மேக்ஸ்வெல் பாராட்டு

இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் மிரட்டலாக சதம் விளாசியது சர்வதேச கிரிக்கெட் வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து வீரர் சூர்யகுமாரை பாராட்டி வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இதுகுறித்து மேக்ஸ்வெல் பேசுகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியதை கவனிக்கவில்லை. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் கார்சை ஆரோன் ஃபின்ச் எனக்கு அனுப்பினார். அப்போது சூர்யகுமார் 50 பந்துகளில் சேர்த்த ரன்களுக்கும், மற்ற வீரர்களின் ரன்களுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

வேற்று கிரகவாசி

வேற்று கிரகவாசி

வேறு கிரகத்தில் பிறந்தவர் போல் விளையாடினார். அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக சூர்யகுமார் ஆடிய இன்னிங்ஸின் வீடியோவை பார்த்து மிரண்டே போனேன். ஏனென்றால் அனைத்து வீரர்களையும் கடந்து மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். அவருக்கு அருகில் இப்படியான ஷாட்களை விளையாடக் கூடிய வீரர்கள் தற்போது யாரும் இல்லை என்று தெரிவித்தார்.

பணம் இல்லை

பணம் இல்லை

தொடர்ந்து சூர்யகுமார் யாதவிற்கு பிக் பாஷ் கிரிக்கெட் ஒப்பந்தம் கிடைக்குமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு, சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு போதிய பணம் யாரிடமும் இல்லை. அதனால் அதற்கு வாய்ப்பு இல்லை. அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்றால், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் வெளியேற்ற வேண்டும் என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

Story first published: Wednesday, November 23, 2022, 20:11 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+