ராஜஸ்தானை வீழ்த்த தாதா கங்குலி சொன்ன டிரிக்... ரகசியத்தை சொன்ன அந்த இளம் கேப்டன்
ஜெய்பூர்:கங்குலி சொன்னதை அப்படியே பாலோ செய்ததால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயிக்க முடிந்ததாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் 40வது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்பூர் நகரில் நடைபெற்றது. போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சினை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகானே 63 பந்தில் 105 ரன்கள் குவித்தார். ஸ்மித் 50 ரன்களை எடுத்தார்.

டெல்லி வெற்றி
தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அருமையான துவக்கம்
போட்டிக்கு பின் பேசிய ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது: சொந்த மைதானத்தை தவிர வெளி மைதானங்களில் ஆடும்போது எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். போட்டியில் துவக்கம் மிக அருமையாக இருந்தது.

மிக்க மகிழ்ச்சி
தவான் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். இந்த வெற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 200 ரன்களை கடக்கும் என்று நினைத்தோம்.

சிறப்பான பந்துவீச்சு
ஆனால், எங்களது பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அதை முறியடித்தனர். சேசிங் செய்ய இறங்கும்போது கங்குலி யார் சிறப்பாக ஆடுகிறீர்களோ அவர்கள் இறுதிவரை நின்று ஆடவேண்டும் என்று கூறினார்.

வெற்றி கிடைத்தது
அதனை மனதில் கொண்டு களம் இறங்கி ஆடினோம். பன்ட் சிறப்பாக துவங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். தவான் கடந்த 2 ஆட்டங்களாக சிறப்பான துவக்கத்தினை அளித்திருக்கிறார் என்றார்.


Click it and Unblock the Notifications