நாங்க பெரிய 'ஜீரோ'வாகி விட்டோம்.. டோணி சொல்கிறார்!
வாஷிங்டன்: நியூசிலாந்து அணி எங்களை ஒட்டுமொத்தமாக நொறுக்கிப் போட்டு விட்டது. நாங்கள் மிகப் பெரிய ஜீரோவாகி விட்டோம் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.
நியூசிலாந்துடன் நடந்த ஒரு நாள் தொடரை 4-0 என்ற கணக்கில் அந்த அணி வென்ற நிலையில், கடைசிப் போட்டியில் ஏற்பட்ட கடுமையான தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படிச் சொன்னார் டோணி.
அதேசமயம், 5வது கடைசிப் போட்டியில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீசாத போதிலும் அவர்களைப் பாராட்டியுள்ளார் டோணி.
கடைசிப் போட்டியின் முடிவில் டோணி செய்தியாளர்களிடம் பேசியதாவது... அந்தப் பேட்டியின்போது கிட்டத்தட்ட தத்துவஞானி போலப் பேசினார் டோணி...

எல்லோமே மோசம்தான்...
எல்லாத் தோல்விகளுமே மோசமானதுதான். ஒரு நாளின் முடிவில் உங்களால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்வது கஷ்டம்தான்.. ஆனால் வேறு வழியில்லையே..

பேட்டிங் சரியில்லை..
நமது பேட்டிங்குக்காக நிறைய மெனெக்கெடுகிறோம். அனுபவம் இல்லாத வீரர்கள் உள்ளனர். இருந்தாலும் பல முக்கிய வீரர்கள், அனுபவ வீரர்களும் உள்ளனர்.

அவிங்க நல்லா திட்டம் போடுறாய்ங்களே..
ஆனால் நியூசிலாந்துக்காரர்கள் பிரமாதமாக திட்டம் போட்டு தெளிவாக அதை அமல்படுத்தி விடுகின்றனர். நாம் என்னதான் முயற்சித்தாலும் அவர்கள் முன்பு அது பலிக்காமல் போய் விடுகிறது.

குறி வச்சுத் தூக்குறானுக பாஸ்...
நமது வீரர்களை தனித் தனியாக குறி வைத்து காலி செய்கிறார்கள் நியூசிலாந்து வீரர்கள். ஒவ்வொரு வீரருக்கும் தனியாக வியூகம் அமைக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு வீரர் நிலைத்து நின்று விட்டால் அவரைக் குறி வைத்து அவுட்டாக்க முயற்சிக்கின்றனர்.

நாம் பெரிய ஜீரோ...
தொடர் முழுவதும் நியூசிலாந்து வீரர்கள், பேட்டிங், பந்து வீச்சு என எல்லாவற்றிலுமே நம்மை நொறுக்கி விட்டார்கள். அது தான் நமக்குப் பாதகமாக விட்டது. மொத்தத்தில் நாம் பெரிய ஜீரோவாகி விட்டோம்.


Click it and Unblock the Notifications