Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய பௌலர்கள் வச்சுருக்குற பொறியில எலி மாதிரி மாட்டிக்கிறோம்... லாபுசாக்னே வருத்தம்!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த இரு போட்டிகளின் 4 இன்னிங்சிலும் சேர்த்து ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே 129 ரன்களை மட்டுமே அடித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் அஸ்வின் உள்ளிட்ட பெலளர்களின் வலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மாட்டிக் கொள்வதாக லாபுசாக்னே வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் அடுத்த போட்டி

சிட்னியில் அடுத்த போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான அடுத்தடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் அடுத்ததாக 2 போட்டிகளை இரு அணிகளும் எதிர்கொள்ள உள்ளன. அடுத்த போட்டி வரும் 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் தவிப்பு

ஸ்டீவ் ஸ்மித் தவிப்பு

முன்னதாக நடைபெற்று முடிந்துள்ள இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே இருவரும் சொதப்பலான ஆட்டங்களையே தந்துள்ளனர். இரு போட்டிகளிலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களையும் லாபுசாக்னே 129 ரன்களையும் அடித்துள்ளனர். ஒற்றை இலக்க எண்களிலிருந்து ஸ்மித் மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறார்.

பொறியில் மாட்டிக் கொள்கிறோம்

பொறியில் மாட்டிக் கொள்கிறோம்

இந்நிலையில் இந்திய அணியின் ஸ்பின்னர் ரவி அஸ்வின் மிகவும் சிறப்பான பௌலர் என்றும் அவர் மிகுந்த தயாரிப்பு மற்றும் திட்டங்களுடன் போட்டிகளை அணுகுவதாகவும் லாபுசாக்னே தெரிவத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவரின் செயல்திட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பொறியில் மாட்டிக் கொள்வதை போல வீழ்வதாக தெரிவித்தார்.

சவாலாக உள்ளது

சவாலாக உள்ளது

இந்திய பெலளர்களின் இடது பக்க ட்ராப் மிகவும் சவாலாக உள்ளதாகவும் அந்த பந்துகளில் பவுண்டரிகளை அடிப்பது மட்டுமின்றி சுழற்றி அடிப்பதும் சிரமமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இந்திய பௌலர்கள் இந்த தொடரில் சிறப்பான திட்டங்களுடன் வந்துள்ளதாகவும் ஆப்சைடில் ரன் எடுப்பதற்கான வாய்ப்பை அவர்கள் தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Friday, January 1, 2021, 15:31 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+