கண்டுபிடிச்சாச்சு… கண்டுபிடிச்சாச்சு.. நம்பர் 4 பேட்ஸ்மென் இவர் தான்.. குதூகலிக்கும் அந்த ஸ்டார்
மும்பை: இந்திய அணிக்கான வருங்கால நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டதாக யுவராஜ் சிங் டுவிட்டர் மூலம் குதூகலித்துள்ளார்.
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் 4வது இடத்தில் யாரை இறக்குவது என்று இன்னும் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கிறது. இவரா, அவரா என்று ஆடுபுலி ஆட்டம் போல காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
அம்பத்தி ராயுடுவை அந்த இடத்திற்கு தயார் செய்தது இந்தியா. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசி. தொடரின்போது மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

பலன் இல்லை
ஒன்றிரண்டு போட்டிகளில் விஜய் சங்கரை களம் இறக்கினர். அவரும் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் ஆட்டத்தின் நிலைமைக்கு ஏற்ப தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் களம் இறங்கினர். அதுவும் பெரிதாக பலன் அளிக்க வில்லை.

ரிஷப் பன்ட் வந்தார்
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தவான் காயத்தால் விலகியதால் ரிஷப் பன்ட் வந்தார். இங்கிலாந்துக்கு எதிராக 29 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 பந்தில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரிஷப்புக்கு 4ம் இடம்
இந்நிலையில் வருங்காலத்திற்கான இந்திய அணியின் 4வது இடத்தில் களம் இறங்கி விளையாடும் பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என்று யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
உருவாக்க வேண்டும்
வருங்காலத்திற்கான நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன். ரிஷப் பந்தை அதற்கேற்ப சரியான வகையில் உருவாக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications