நியூசி.க்கு ஸ்கெட்ச் ரெடி.. செமிபைனல் மாதிரி தூக்க போறோம்..! அசால்ட் நம்பிக்கையில் இயன் மார்கன்
Recommended Video
லார்ட்ஸ்: எல்லா வகையிலும் முயற்சித்து, நியூசிலாந்தை வீழ்த்தி இந்த முறை உலக கோப்பையை கைப்பற்றுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொட ரில் 1992ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக தற்போது தான் இங்கிலாந்து பைனலுக்கு முன்னேறி இருக்கிறது. 2வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தட்டி தூக்கி பைனலுக்குள் நுழைந்திருக்கிறது.
நாளை லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் இயர் மார்கன் கூறியிருப்பதாவது: 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளோம். 2015ம் ஆண்டு தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறினோம்.

கனவிலும் நினைக்கவில்லை
அதன் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பைனலுக்குள் நுழைவோம் என கற்பனை செய்துகூட பார்த்தது இல்லை. அணியினை முழுமையாக கட்டமைப்பும் வகையில் அதற்கான பணிகளை 2015ம் ஆண்டு முதலே செய்து வந்தோம்.

சாதகமான நிலை
அணியில் பல நிலைகளில் மாற்றத்தை கொண்டு வந்தோம். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் நல்ல பலனை கொடுத்தது. அரையிறுதியை பற்றி சொல்ல வேண்டுமானால், கிடைத்த சூழ்நிலைகளை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம்.

பலன் கிடைத்தது
பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் என்பதால் நன்றாக பேட் செய்தோம். ஆடு களமும் எங்களுக்கு பொருத்தமாக இருந்தது. எங்களது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சிறப்பாக செயல்பட்ட போதிலும், அவர்களை வெளியேற்றும் வழிகளை தெரிந்து அதற்கேற்ப விளையாடினோம். நல்ல பலன் கிடைத்தது.

முக்கியமான நாள்
இறுதிப் போட்டி நடைபெறும் ஞாயிற்றுக் கிழமை முக்கியமான நாள். அன்றைய நாளானது அரையிறுதி போன்று எதிர்நோக்கக்கூடிய தினம். அந்த போட்டியில் வெற்றிக்கான பல திட்டங்களை வைத்திருக்கிறோம் அனுபவித்து விளையாட காத்திருக்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications