நாலஞ்சு மேட்சுகள்ல சரியா விளையாடல... அத இப்ப சரி செஞ்சாகணும்... மைக் ஹெசன் உறுதி
அபுதாபி : கடந்த நாலைந்து போட்டிகளில் ஆர்சிபி சரியாக விளையாடவில்லை என்றும் இன்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதை சரி செய்ய வேண்டும் என்றும் ஆர்சிபி கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான போட்டிகளை விளையாட ஆர்சிபிக்கு வாய்ப்பு கிடைத்துளளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய போட்டி ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறும் நிலையில், வெற்றி பெறும் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.

வெற்றி பெறும் அணிக்கு 2வது இடம்
ஐபிஎல்லின் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடையவுள்ளன. இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரிடையாக இரண்டாவது இடத்திற்கு செல்லும் மாறாக தோல்வியுறும் அணி, நாளைய போட்டிக்காக காத்திருக்க வேண்டிவரும்.

வெற்றிக்கு ஆர்சிபி தீவிரம்
கடந்த 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ள ஆர்சிபி அணி, 4 போட்டிகளில் தோற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இன்றைய போட்டியில் மோதுகின்றது. பிளே-ஆப் கனவுடன் இன்றைய போட்டியில் இந்த இரு அணிகளும் மோதவுள்ள நிலையில் இன்றைய போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும்.

சிறப்பாக விளையாட வாய்ப்பு
இந்நிலையில் கடந்த நான்கைந்து போட்டிகளில் சரியாக விளையாடாத ஆர்சிபி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை இன்றைய போட்டியில் காண்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி தலைமை கோச் உறுதி
ஆர்சிபியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள ஆர்சிபி தலைமை கோச் சைமன் காட்டிச், இன்றைய பேட்டியில் ஆர்சிபி சேஸிங்கை தேர்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார். இந்த தொடரில் அதிக போட்டிகளில் சேஸிங்கை தேர்வு செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications