பிளான் ஏ பெயிலியர்... அதனால பிளான் பி ரெடியா இருக்கு...!! இந்தியாவை தோற்கடிக்காம விட மாட்டோம்..!!
Recommended Video
லண்டன்: ஒழுங்காக விளையாடாதவர்களை கடுமையாக திட்டவும் தயங்க மாட்டேன், இந்திய அணிக்கு எதிராக பிளான் பி திட்டம் உள்ளது என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளசிஸ் கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. தொடரின் முதல் நான்கு நாட்களில் பங்கேற்ற 2 போட்டியிலும் தென் ஆப்ரிக்க அணிக்கு தோல்வி தான் கிடைத்தது. குறிப்பாக தங்களைவிட பலம் குறைந்த வங்கதேச அணியிடம் 21 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி அந்த அணியை பெரிதும் பாதித்திருக்கிறது. தவறுகளை திருத்திக்கொண்டு ஒழுங்காக விளையாடாத தென் ஆப்ரிக்க வீரர்களை கடுமையாக திட்ட தயங்கமாட்டேன் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளசிஸ் எச்சரித்துள்ளார்.

எனக்கு கோபம்
அவர் கூறியதாவது: எனது கேப்டன் ஸ்டைல் என்பது எல்லைக்குள் வரையறுக்கப்பட்டது. வீரர்கள் ஒழுங்காக, அணியின் வெற்றியை மையப்படுத்தி ஆடாவிட்டால் கோபம் வரும்.

மோசமான தோல்வி
உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் சாதிக்க வேண்டும் என்றால் ஓய்வறையில் ஊக்கம் அளிக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். இது போன்ற மோசமான தோல்விகளை மனதை அதிகம் நோகடித்துவிடும்.

திட்ட தயங்க மாட்டேன்
இந்த நாள் மிக மோசமான நாள் என்று காரணம் சொல்லி தப்பிப்பவன் நான் அல்ல. களத்தில் சரியாக விளையாடாத வீரர்களை கடுமையாக திட்டவும் நான் தயங்கமாட்டேன். அணியின் வெற்றியை மனதில் கொண்டு, தவறுகளை திருத்திக் கொண்டு ஆடுங்கள்.

வலிமையான இந்தியா
ஏன் என்றால், அடுத்துவரக்கூடிய ஆட்டங்கள் மிக முக்கியமானவை. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலை உள்ளது. அணி ஏனென்றால், வலிமையான இந்திய அணியுடன் விளையாடப் போகிறோம்.

பிளான் பி இருக்கிறது
இப்போதுள்ள நிலையில் போதிய பார்மில் இல்லை. ஆதலால், அதற்கு ஏற்றார்போல் மாற வேண்டும். ஆனால், இந்தியாவை வெற்றி கொள்ள தனியாக பிளான் பி வைத்திருக்கிறோம். வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்துவீச வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். அந்த திட்டம் முடிந்துவிட்டது. இந்தியாவுக்கு எதிராக பிளான் பி திட்டத்தை செயல் படுத்துவோம் என்றார்.


Click it and Unblock the Notifications