Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொண்டாட்டத்திற்கான காரணத்தை பாருங்க... ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

மும்பை : இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தங்களது மகன் அகஸ்தியாவின் 5 மாத பிறந்தநாளை நேற்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.

இதையொட்டி பாண்டியா வெளியிட்டுள்ள பதிவில் அவர்கள் மூவரும் அழகான கேக்குடன் காட்சியளிக்கின்றனர்.

மேலும் தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று தன்னுடைய கேப்ஷனில் பாண்டியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். டி20 தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நாடு திரும்பிய அவர் கடந்த ஜூலை மாதத்தில் பிறந்த தன்னுடைய மகன் அகஸ்தியாவுடன் பொழுதை கழித்து வருகிறார்.

கொண்டாட்டத்தில் பாண்டியா

கொண்டாட்டத்தில் பாண்டியா

அகஸ்தியா பிறந்த ஒரே மாதத்தில் பாண்டியா ஐபிஎல் 2020 சீசனுக்காக யூஏஇ புறப்பட்டு சென்ற நிலையில் தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்தை மிகவும் மிஸ் செய்வதாக முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய மகனின் 5 மாத பிறந்தநாளை தற்போது நடாஷாவுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் பாண்டியா, நடாஷா மற்றும் அகஸ்தியா மூவரும் கொண்டாட்டத்துடன் போஸ் கொடுக்கின்றனர். மேலும் அவர்களுக்கு முன்பாக சூப்பரான கேக் காணப்படுகிறது. அதில் சான்டா கிளாசின் உருவம் காணப்படுகிறது.

பாண்டியா மகிழ்ச்சி பதிவு

பாண்டியா மகிழ்ச்சி பதிவு

மேலும் அந்த கேக்கின் முன்பு அகஸ்தியாவின் 5 மாத பிறந்தநாள் கொண்டாட்டம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை வெளியிட்டுளள் பாண்டியா, தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேப்ஷனில் லவ் உள்ளிட்ட எமோஜிகளையும் அவர் பதிந்துள்ளார்.

Story first published: Thursday, December 31, 2020, 13:56 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+