உலகத்துல எங்க ஆடினாலும் தட்டணும்... தூக்கணும்... இதுதான் எங்களோட லட்சியம்... ஆன்டர்சன் உறுதி
சென்னை : உலகின் எந்த மூலையில் விளையாடினாலும் வெற்றி பெற வேண்டும என்ற லட்சியத்துடன் இங்கிலாந்து அணி உள்ளதாக அந்த அணியின் பௌலர் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.
இன்றைய இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு சுருண்டது. ஆன்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

இந்தியா தோல்வி
இன்றைய இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. இதையடுத்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் இமாலய வெற்றியை இங்கிலாந்து கண்டுள்ளது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

ஆன்டர்சன் 3 விக்கெட்டுகள்
இன்றைய போட்டியில் இங்கிலாந்து பௌலர்ள் ஜேம்ஸ் ஆன்டர்சன் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் முறையே 3 மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் ஹீரோக்களாக செயல்பட்டனர். ஆட்ட நாயகனாக 200 ரன்களுக்கு மேல் குவித்த கேப்டன் ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் இலக்கு
இந்நிலையில் உலகின் எந்த மூலையில் விளையாடினாலும் வெற்றியை பெறும்வகையில் தங்களது திறமைகளை இங்கிலாந்து அணி மேம்படுத்தி வருவதாக ஜேம்ஸ் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார். அணியின் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அணியின் முழுமையான செயல்பாடு குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது
மேலும் தனக்கு வயதாவதால் அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் தொடர்ந்து தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் தங்களது அணி நம்பர் ஒன் இடத்தை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications