கண்ணா… இது ஆரம்பம்…!! இனிமே தான் இருக்கு கச்சேரி…!! கெத்து காட்டிய அந்த வீரர்
சண்டிகர்: இதுவரை நாங்கள் காத்திருந்ததற்கு கிடைத்த பரிசு தான் பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றி என்று ஆட்டநாயகன் டி வில்லியர்ஸ் தெரிவித்து உள்ளார்.
மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க வீரர்களாக பிரித்வ் படேல், விராட் கோலி களமிறங்கினர். பிரித்வி படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாய் பறந்த பந்துவீச்சு
கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார்.

வென்றது பெங்களூரு
இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாயகன் டி வில்லியர்ஸ்
இறுதிவரை ஆட்டமிழக்காமல் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி குறித்து கூறுகையில், இதற்கு நீண்ட காலமாக காத்திருந்தோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.

இது ஆரம்பம்
சரியான திசையில் அணி பயணிப்பதற்கான முதல் படி தான் இந்த வெற்றி. இதே நிலையை வரும் போட்டிகளிலும் நீங்கள் பார்க்கலாம். கடந்த 11 மாதங்களாக நான் கிரிக்கெட் ஆடவில்லை.

சாத்தியமானது
அதனால் சில போட்டிகளில் நான் தடுமாறினேன். கடும் பயிற்சிகளால் சாத்தியம் ஆனது. வெற்றியை நிச்சயம் தொடர்ந்து தக்க வைப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications