யாராக இருந்தாலும் சரி... விடமாட்டோம்.. வெச்சு செய்வோம்..! அரையிறுதிக்கு காத்திருக்கும் கோலி அதிரடி
லீட்ஸ்: எதிரணி யார் என்பது கவலை இல்லை, அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கருணரத்னே 10, பெரேரா 18 ரன்களில் பும்ரா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
குசல் மெண்டீஸ் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். பின்னர், பெர்னாண்டோ 20 ரன்னில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இலங்கை 55 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

264 ரன்கள்
மேத்யூஸ், திரிமன்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. திரிமன்னே 53 ரன்கள் எடுத்து குல்தீப் ஓவரில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடி சதம் அடித்தா மேத்யூஸ் 113 (128) ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது.

வென்றது இந்தியா
265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடினர். ரோகித் சர்மா 92 பந்துகளில் சதம் விளாசினார். 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ந்து ஆடிய லோகேஷ் ராகுல் 128 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். விராட் கோலி 34 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

பாகுபாடு கிடையாது
போட்டிக்கு பின் வெற்றி குறித்து கோலி கூறியதாவது: அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி. சிறிய அணி, பெரிய அணி என்ற பாகுபாடு இல்லை. ஆப்கானிஸ்தான் அணியும் ஒன்றுதான் ஆஸ்திரேலிய அணியும் ஒன்றுதான்.

எளிதில் வீழ்த்துவோம்
யாரும், யாரை வேண்டுமானாலும் எளிதில் வீழ்த்தலாம், அன்றைய போட்டியில் யார் சிறப்பாக செயல்படுகிறாரோ அவர்களுக்கே வெற்றி. எதிரணி யார் என்பது கவலை இல்லை. அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆட முயற்சிப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications