Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாஸ்.. பாஸ்... இனிமேல் பொறுப்பா விளையாடுவோம் பாஸ்... கோஹ்லி 'கியாரண்டி'!

ஹாமில்டன்: இனிமேல் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம், பொறுப்பாக விளையாட முயற்சிப்போம் என்று விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துடனான முதல் போட்டியில் இந்தியா தோல்வியுற்ற நிலையில் இப்படி கருத்து தெரிவித்துள்ளார் துணை கேப்டன் கோஹ்லி.

கோஹ்லி போட்ட சதம்

கோஹ்லி போட்ட சதம்

முதல் போட்டியில் இந்தியா சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இத்தனைக்கும் கோஹ்லி முதல் போட்டியில் அபாரமான சதம் அடித்திருந்தார். ஆனால் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சொதப்பலால் தோல்வியைச் சந்தித்து விட்டோம்.

அடுத்த போட்டியில் விட மாட்டோம்ல

அடுத்த போட்டியில் விட மாட்டோம்ல

இந்த நிலையில் 2வது போட்டியில் நிச்சயம் வெல்ல முயற்சிப்போம். உஷாராக இருப்போம். பொறுப்பாக ஆடுவோம் என்று கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹாமில்டனில் நாளை

ஹாமில்டனில் நாளை

2வது ஒரு நாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது. இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், நான் நன்றாக விளையாடியிருக்கலாம். ஆனால் நாம் வென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நிச்சயம் இந்தத் தொடரில் நாங்கள் வெல்ல முயற்சிப்போம். இன்னும் பொறுப்புடன் பேட்டிங்கில் கவனம் செலுத்துவோம்.

என் பேட்டிங் சூப்பரப்பு

என் பேட்டிங் சூப்பரப்பு

தனிப்பட்ட முறையில் எனது பேட்டிங்கில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. நான் விளையாடிய விதம் திருப்தி தந்துள்ளது. மனதளவில் நான் சரியான முறையில் விளையாடியதாக உணர்கிறேன்.

5 நாள் பயிற்சி பண்ணோமே...

5 நாள் பயிற்சி பண்ணோமே...

போட்டிக்கு முன்பு கிடைத்த ஐந்து நாள் பயிற்சி உபயோகரமானதாக இருந்தது. அது எனக்கு நல்ல உதவியாக இருந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட அது போதுமானதாக இருந்தது. பந்து வீச்சில் சற்று இறங்குமுகமாக உள்ளோம். அதை சரி செய்ய முயற்சிப்போம்.

துரத்துறதுதான் ஈஸி பாஸ்...

துரத்துறதுதான் ஈஸி பாஸ்...

சேசிங் செய்வது எப்போதுமே எளிதானதுதான். நமக்கு எது இலக்கு என்பது தெளிவாகி விடுகிறது. புத்திசாலித்தனமாக ஆடி அதை அடைந்தாலே போதும். எனவே சேசிங் எப்போதுமே சாதகமானதுதான்.

ஆனால் எல்லாரும் நல்லா விளையாடனுமே

ஆனால் எல்லாரும் நல்லா விளையாடனுமே

ஆனால் நான் மட்டும் நன்றாக ஆடினால் எனக்கு சந்தோஷம் இல்லை. அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் கூடவே கிடைத்தால்தான் அதை முழுமையாக என்னால் அனுபவிக்க முடியும். எப்போதுமே நான் சாதனையை அடைவதில்தான் விருப்பம் காட்டுவேன் என்றார் கோஹ்லி.

Story first published: Tuesday, January 21, 2014, 15:07 [IST]
Other articles published on Jan 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+