Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜூலை மாசத்துக்குள்ள டி20 உலக கோப்பை பத்தி முடிவெடுப்போம்... பிசிசிஐ உறுதியா சொல்லியிருக்காங்க

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் டி20 உலக கோப்பை தொடர் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் ஜூலை மாதத்திற்குள் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் என்றும் பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தொடர்ந்த கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையிலும் ஐபிஎல் 2021 தொடர் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் ஐபிஎல்லின் பயோ பபுளிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வீரர்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகினர்.

நடைபெறுவதில் சிக்கல்

நடைபெறுவதில் சிக்கல்

இதையடுத்து ஐபிஎல் 2021 தொடர் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெறுமா?

இந்தியாவில் நடைபெறுமா?

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3வது அலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து டி20 உலக கோப்பை இந்தியாவிலேயே நடத்தப்படுமா அல்லது வேறு இடத்தில் திட்டமிடப்படுமா என்றும் கேள்விகள் ரசிகர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.

ஜூலை மாதத்தில் முடிவு

ஜூலை மாதத்தில் முடிவு

இந்நிலையில் டி20 உலக கோப்பை குறித்து ஜூலை மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்குள் நிலைமை மாறும் என்றும் பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிசிசிஐ நம்பிக்கை

பிசிசிஐ நம்பிக்கை

இதையடுத்து இந்தியாவிலேயே டி20 உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவிலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்பதே பிசிசிஐயின் திட்டம். ஆயினும் யூஏஇயில் நடத்துவதை இரண்டாவது தேர்வாகவும் பிசிசிஐ வைத்துள்ளது.

Story first published: Wednesday, May 5, 2021, 19:54 [IST]
Other articles published on May 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+