சுகோய் விமானத்தில் டோணி, சச்சினை கூட்டிச் செல்வோம்-விமானப்படை தளபதி
டெல்லி: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணியை, சுகோய் போர் விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப் போவதாக இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி பி.வி.நாயக் தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசிடம் தானே சிறப்பு அனுமதி பெற்றுத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாயக் கூறுகையில், சச்சினும், டோணியும் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களைப் பெருமைப்படுத்தவும் ஆர்வமாக உள்ளோம்.
சுகோய் போர் விமானத்தில் அவர்களை அழைத்துச் செல்ல ஆர்வமாக உள்ளோம். இதற்கான சிறப்பு அனுமதியை நானே அரசிடம் கோரவுள்ளேன்.
சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே விமானப்படையின் கெளரவ கேப்டனாக உள்ளார். சச்சினும், டோணியும் இதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தால், அவர்களை சுகோயில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
சச்சினுக்குக் கொடுத்தது போன்ற கெளரவ பதவியை டோணிக்குத் தரும் திட்டம் இப்போதைக்கு ஏதும் இல்லை என்றார் நாயக்.
முன்னதாக டோணி தனது மனைவி சாக்ஷி சிங் ராவத்துடன், நாயக்கின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று தெரிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளரான விங் கமாண்டர் பாலாதித்யாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு படங்கள்
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
