Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. வானிலையை கூட பார்க்காமல் பிசிசிஐ போட்டி நடத்துவது ஏன்- முழு விவரம்

டப்ளின்: அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் யாருமே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்று வருகிறது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகித்து வருகிறது.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

2வது டி20

2வது டி20

முதல் டி20 போட்டி நடைபெற்ற அதே டப்ளின் நகரத்தில் உள்ள வில்லேஜ் மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடைபெறுகிறது. கடந்த முறை மழைக் குறுக்கிட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் தடைப்பட்டது. எனினும் அதன் பிறகு 12 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டு இந்தியா வெற்றி கண்டது.

மீண்டும் மழை

மீண்டும் மழை

இந்நிலையில் இன்றைய போட்டியிலும் மழையின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று பெரியளவில் மழை பொழியும் என்பதால் ஆட்டம் பெரியளவில் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இடையில் ஏதேனும் கருணை காட்டினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும்.

குவிந்த விமர்சனங்கள்

குவிந்த விமர்சனங்கள்

வானிலை குறித்து கூட முன்கூட்டியே தெரியாமல் ஏன் பிசிசிஐ மைதானங்களை தேர்வு செய்கிறது?. முக்கியமான போட்டிகளில் இப்படிதான் சொதப்பி விடுகின்றனர் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது பொதுவாக இந்த மாதம் அயர்லாந்து நாட்டில் கோடைக்காலமாம். நல்ல வெயில் அடிக்கும் நேரம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் நல்ல மழை பொழிந்து வருகிறது.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

போட்டி தடைப்படாத வகையில் தான் திட்டம் போடப்பட்டது. எனினும் இயற்கை திடீரென மாற்றத்தை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மழை பொழிந்தாலும், அயர்லாந்து மைதானங்களில் நல்ல மழைநீர் வடிகால்கள் உள்ளன. குறைந்த நேரத்திலேயே மழைநீரை வெளியேற்றிவிடும். எனவே இன்றைய போட்டியும் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது முடிக்கப்பட்டுவிடலாம்.

ஆட்டம் ரத்தானால்?

ஆட்டம் ரத்தானால்?

ஒருவேளை மிகவும் கனமழை பெய்து ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டாலும், அது இந்திய அணிக்கு தான் சாதகமாக அமையும். ஏனென்றால் இந்த தொடரில் இந்திய அணி தான்1 -0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா வென்றதாக தான் அறிவிக்கப்படும்.

Story first published: Tuesday, June 28, 2022, 16:03 [IST]
Other articles published on Jun 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+