Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெல்டன்… பிடிங்க ஃபுல் மார்க்: டோணி குழுவை வாழ்த்திய அப்துல் கலாம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்கள் அணிக்கு ஃபுல் மார்க் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் 5 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது இந்திய அணி.

இந்த வெற்றியை நாடுமுழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அப்துல்கலாம் வாழ்த்து

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவ்வளவாக விளையாட்டு பக்கம் திரும்பி பார்க்காதவர். குடியரசுத் தலைவராக இருந்த போது அவ்வப்போது விளையாட்டு வீரர்களை ஏதாவது விருது நிகழ்ச்சியில் சந்தித்து பேசுவதோடு சரி. விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவரையும் இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி அசைத்து பார்த்து விட்டது.

இந்திய அணி தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டியில் 5 வெற்றிகளை பெற்றதையடுத்து, அப்துல் கலாம் இந்திய அணி வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், ''வெல்டன் இந்தியா.. இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிக்கு முழு மதிப்பெண்" எனக் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 10, 2015, 17:36 [IST]
Other articles published on Mar 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+