Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தாராள பிரபுவாக மாறிய ஆவேஷ்.. 1 ரன் கொடுத்தவருக்கு ஒரு ஓவர்.. அஸ்வின், ஹர்திக் கலக்கல் பந்துவீச்சு

செயிண்ட் கிட்ஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Recommended Video

IND vs WI 3rd T20 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி *Cricket

இன்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் தீபக் கூடாவை பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா சேர்த்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தும் முயற்சியில் ரோகித் ஈடுபட்டார். ஆனால் அவர் செய்த தவறால் அது நடைபெறவில்லை.

 தீபக் ஹூடா ஓவர்

தீபக் ஹூடா ஓவர்

தொடக்கத வீரராக பிராண்டன் கிங் மற்றும்

கையில் மெயர்ஸ் களம் இறங்கினர். முதல் ஓவரை இளம் வீரர் தீபக் ஹூடா வீசினார். முதல் ஓவரில் அவர் ஒரு மட்டுமே விட்டுக் கொடுத்தார் .இதனை அடுத்து வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீச அதனை பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

 கட்டுக்கோப்பான பந்துவீச்சு

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

ஆவேஷ் கான் ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக விளையாட உடனே ஹர்திக் பாண்டியாவை ஓவர் வீச ரோகித் சர்மா அழைத்தார். இது நல்ல பலனை தந்தது. கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் இம்முறை 20 ரன்களில் பாண்டியா பந்துவீச்சில் போல்ட் ஆகினார். இதன் பிறகு தமிழக வீரர் அஸ்வின் பந்து வீசினார். அஸ்வினின் முதல் ஓவரில் சற்று ரன்கள் சென்றாலும் அடுத்தடுத்து ஓவர்களில் அவர் கட்டுக்கோப்பாக பந்து வீசி நெருக்கடியை அளித்தார்.

மேய்ர்ஸ் அதிரடி

மேய்ர்ஸ் அதிரடி

பூரான் 22 ரன்களிலும், ரோமன் போவல் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க , தொடக்க வீரர் மேயர்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 50 பந்துகளை எதிர்கொண்டு 73 ரன்கள் விளாசினார். இதில் எட்டு பவுண்டர்களும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் அதிரடியாக விளையாடிய சிம்ரன் ஹெட்மயர் 20 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகினார்.

 165 ரன்கள் இலக்கு

165 ரன்கள் இலக்கு

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் இழந்து 5 விக்கெட்களை தடுமாறியது. புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 32 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் . ஆவேஷ் கான் 3 ஓவர்கள் வீசி 47 ரன்களை விட்டுக் கொடுத்தார்.ஹர்திக் பாண்டியா 4 ஓவர் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தமிழக வீரர் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்த வில்லை என்றாலும் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

Story first published: Tuesday, August 2, 2022, 23:48 [IST]
Other articles published on Aug 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+