Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

77 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. 419 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. லயான் சாதனை

அடிலெய்ட் : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 419 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி, முழுமையாக கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற , இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

511 ரன்கள்

511 ரன்கள்

தொடக்க வீரர் டேவிட் வார்னர் 21 ரன்களில் ஆட்டமிழக்க, பொறப்புடன் விளையாடிய உஸ்மான் கவாஜா 62 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஸ்மித் டக் அவுட்டாக, டிராவிஸ் ஹெட் மறறும் லாபஸ்சேங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. லாபஸ்சேங் 163 ரன்களும், டிராவிஸ் ஹெட் 175 ரன்களும் விளாச, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 511 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

214 ரன்கள் அவுட்

214 ரன்கள் அவுட்

இதனையடுதது களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பிராத்வையிட் 19 ரன்களிலும், புருக்ஸ் 8 ரன்களிலும், பிளாக்வுட் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, தேஜ்நரைன் சந்தர்பால் அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தனர். இதனால் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

199 ரன்களுக்கு டிக்ளேர்

199 ரன்களுக்கு டிக்ளேர்

297 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக விளையாட முற்பட்டு விரைவாக ஆட்டமிழந்தனர். கவாஜா 45 ரன்களிலும், வார்னர் 28 ரன்களிலும், லாபஸ்சேங் 31 ரன்களிலும், ஸ்மித் 35 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

77 ரன்களில் சுருண்டது

77 ரன்களில் சுருண்டது

497 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் அணிக்கு வெற்றி என்ற இலக்குடன் அந்த அணி வீரர்கள் களமிறங்கினர். ஸ்காட் போலாந்த் ஆட்டத்தின் 6வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு 4வது நாளான இன்று, ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சரிய தொடங்கின. இதனையடுத்து அந்த அணி 77 ரன்களில் சுருண்டு, 419 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது

லயான் சாதனை

லயான் சாதனை

ஆட்டநாயகன் விருது டிராவிஸ் ஹேட்க்கும், தொடர் நாயகன் விருது மார்ன்ஸ் லாபஸ்சேங்கும் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வார்னே, மெக்ராத்க்கு பிறகு 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை லயான் பெற்றுள்ளார். தற்போது 442 விக்கெட்டுகளுடன் அஸ்வின், அவருக்கு பிறகு உள்ளார்.

Story first published: Sunday, December 11, 2022, 19:09 [IST]
Other articles published on Dec 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+