டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டோமினிக்காவில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இது இந்திய அணிக்கு மைனஸ் பாயிண்டாக பார்க்கப்பட்டது.
இதற்கு மேல், டாசை இழந்த இந்திய அணி முதலில் பந்துவீச பணிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு பாதகமாக பார்க்கப்பட்டது. காரணம், ஆடுகளம் தோய்வாக இருப்பதால் கடைசி இன்னிங்சில் பேட்டிங் செய்யும் போது பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதனால் முதலில் பேட்டிங் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைந்த இலக்கில் சுருட்ட வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது. முகமது சிராஜ், உனாட்கட் ஆகியோர் துல்லியமாக பந்துவீசினாலும், விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, அஸ்வின் பந்துவீச வந்தார். அப்போது சிறப்பாக வீசிய அவர் தேஜ்நரைன் சந்தர்பாலை கிளீன் போல்ட் ஆக்கினார், இதே போன்று கேப்டன் பிராத்வெயிட்டும் சொற்ப ரன்களில் அஸ்வின் வீழ்த்தினார். இதே போன்று ஆல்ரவுண்டராக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே ரேமன் ரெய்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனார்.
இதே போன்று ஜடேஜாவும் , தனது விக்கெட்டை வேட்டையை தொடங்கினார். இதன் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்வுட் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பவிலிங்கில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ஜோஸ்வா 2 ரன்களில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
ஆடுகளம் தோய்வாக காணப்படுவதால், வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களுக்குள் சுருட்டி விட்டு, இந்திய அணி, முதல் இன்னிங்சில் பெரிய இலக்கை எட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கும் இந்த ஆடுகளம் சவாலை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.