Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19 ரன்களுக்கு 6 விக்கெட்கள்.. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ரஸல்.. வெஸ்ட் இண்டீஸின் அசுரத்தனமான டி20 ஆட்டம்

லூசியா: ரஸலின் காட்டடியால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

Recommended Video

1st T20 Australia அணியை துவம்சம் செய்த West Indies | Oneindia Tamil

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட் செய்த வெஸ்டீ இண்டீஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் டாப் ஆர்டர் சறுக்கலை சந்தித்தது. 65 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறி வந்தது. பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரூ ரஸல் தனது அதிரடி ஆட்டத்தால் அணீயை சரிவில் இருந்து மீட்டார். 28 பந்துகளை சந்தித்த அவர், 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 போட்டியில் ரஸல் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும். இதில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். இதனால் இறுதியில் அந்த அணி 145 ரன்களை எடுத்தது.

வலுவான சூழல்

வலுவான சூழல்

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் சிறப்பாக விளையாடியது. மேத்யூவ் வேட் (33) மற்றும் மிட்சல் மார்ஷ் (51) ஆகியோர் சிறப்பான பார்டனர்ஷிப் அமைத்தனர். 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் தான் இருந்தது. 12 ஓவர்களில் 56 ரன்கள் தேவை என்ற வெற்றிகரமான சூழல் இருந்தது. ஆனால் மெக்காய் மற்றும் ஹேடன் வாஷ் ஆகியோர் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

ஆஸ்திரேலியாவின் சறுக்கல்

ஆஸ்திரேலியாவின் சறுக்கல்

இவர்கள் இருவரின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது. 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 38 ரன்களுக்குள் மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிலும் கடைசி 19 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

இதனால் இறுதியில் அந்த அணி 16 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Story first published: Saturday, July 10, 2021, 20:30 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+